CDS மற்றும் RAW பதவிகளுக்கு ஜூன் மாதத்திற்குள் புதிய தலைவர்களை நியமிக்க உள்ள மோடி அரசு..

பாதுகாப்பு படை தலைவர் (CDS), ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) மற்றும் புலனாய்வு பணியகம் (IB)உள்ளிட்ட உயர்மட்ட தேசிய பாதுகாப்பு அலுவலகங்களில் மூத்த அதிகாரிகளை ஜுன் மாதம் மத்திய அரசு நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய இராணுவத்தின் முதல் பாதுகாப்பு படை தலைவரான ஜெனரல் பிபின் ராவத் 6 மாதங்களுக்கு முன்பு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த பதவி காலியாக உள்ளது. இப்பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி.சிங் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சி.பி.மொஹந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு படை தலைவர் பதவிக்கு வயது 62 க்குள் இருக்க வேண்டும். தற்போதுள்ள ரா மற்றும் ஐபி தலைவராக பணியாற்றி வரும் சமந்த் கோயல் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஓராண்டு கால நீட்டிப்பு இந்த மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த பதவிக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் அரசு முடிவெடுக்க உள்ளது.

தற்போது ஐபி தலைவர் பதவிக்கு 1987 பேட்ச் பீகார் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஏ.எஸ்.ராஜன் முன்னணியில் உள்ளார். இவர் தற்போது உளவுத்துறை பணியகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ராஜன் குஜராத்தில் துணை இயக்குனராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜிவ் கௌபா, ஆகஸ்ட் 30, 2021 ஆம் ஆண்டு மேலும் ஒரு வருடம் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவரது பதவிகாலம் ஆகஸ்ட் 30, 2022 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published.