சுரங்க முறைகேடு: சீன நிறுவனத்திற்கு அதிரடியாக தடை விதித்த காங்கோ நீதிமன்றம்..

காங்கோ ஜனநாயக குடியரசின் நீதிமன்றம் டென்கே ஃபுங்குரூம் சுரங்கத்தில் இருந்து சீன நிறுவனத்தை நீக்கியுள்ளது. சீன நிறுவனம் முறைகேடுகளில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சுரங்க நிறுவனமான சைனா மாலிப்டினம் முறைகேடுகளில் ஈடுபட்டதால் சுரங்கம் தோண்டும் பணியிலிருந்து ஆறு மாதத்திற்கு பணியில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசின் டென்கே ஃபுங்குரூம் சுரங்கம் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோபால்ட் உற்பத்தி செய்யும் சுரங்கமாகும்.

இந்த சுரங்கத்தில் கோபால்ட் தவிர காப்பரும் கிடைக்கிறது. உலகிலேயே அதிக அளவில் இந்த சுரங்கத்தில் தான் காப்பர் மற்றும் கோபால்ட் கிடைக்கிறது. சீனா தற்போது மின்சார வாகன உற்பத்தியில் கால் பதித்துள்ளதால் சீனாவிற்கு மின்சார வாகனங்களில் பயன்படுத்த கோபால்ட் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த நிலையில் சீனா மாலிப்டினம் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என காங்கோ ஜனநாயக குடியரசு கூறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு சீன அரசின் நிதியுடன் சைனா மாலிப்டினம் நிறுவனம் டெங்கே ஃபுங்குங்ரூம் சுரங்க நிறுவனத்தை வாங்கியது.

சுரங்கத்தில் பணிபுரியும் காங்கோ ஊழியர்கள் பாதுகாப்பு சிக்கல்களை சந்தித்து வந்தனர். அங்கு நடக்கும் விபத்துக்களை மறைக்க காங்கோ ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை வெளியே தெரியாமல் இருக்க ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது

ஆனால் இதனை சீனா மறுத்த நிலையில், காங்கோ ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெகெடி, சீனா மாலிப்டினம் காங்கோ அரசிற்கு சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட செம்பு மற்றும் கோபால்ட் ஆகியவற்றிற்கு ராயல்டி செலுத்துவதில் ஏமாற்றி இருக்கலாம் என கூறி அதனை விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தார்.

இறுதியாக காங்கோ அரசுக்கு சொந்தமான ஜிகோமினஸ் சுரங்க நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது. சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட செம்பு மற்றும் கோபால்ட் இருப்புகளை சீன மாலிப்டினம் அறிவிக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் காங்கோ ஜனநாயக குடியரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

உலகின் 70 சதவீத கோபால்ட்டை காங்கோ ஜனநாயக குடியரசின் டென்கே ஃபுங்குரூம் சுரங்கம் தான் உற்பத்தி செய்கிறது. காங்கோவில் கோபால்ட் உற்பத்தி செய்யும் 19 சுரங்கங்களில் 15 சுரங்கங்கள் சீனாவிற்கு சொந்தமானது. இந்த கோபால்ட் பெரும்பாலும் மின்சார கார் பேட்டரி தயாரிப்பதற்கு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காங்கொ அதிகாரிகள் சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி விரிவான ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் டென்கே ஃபுங்குரூம் சுரங்கத்தில் இருந்து ஆறு மாதத்திற்கு தடை செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது சீனாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.