தோர் சுத்தியலை ஏந்த மீராபாய் ஜானு தகுதியானவர்.. பாராட்டிய தோர் கதாநாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்..

பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு 2022 ல் இந்தியாவின் மீரா பாய் ஜானு தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு மார்வெல் சூப்பர் ஹிரோ தோர் கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மீரா பாய் ஜானுவை பாராட்டியது சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு 2022 போட்டியில் மீரா பாய் ஜானு இந்தியாவின் முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். அவர் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டிடியில் 201 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இவரது இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தனது வெற்றியை கொண்டாடும் வகையில், மீரா பாய் ஜானு தங்கப்பதக்கத்துடன் படங்களை ட்விட்டரில் பதிவு செய்தார்.

அதில், 201 கிலோ எடையை தூக்குவது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. ஆனால் வீடு திரும்பிய பில்லியன் கணக்கானவர்களின் அன்பு மற்றும் விருப்பத்திற்கு நன்றி, ஒவ்வொரு சவாலும் ஒரு முயற்சி மட்டுமே என ட்வீட் செய்தார். அவரது ட்வீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக பயனர் ஒருவர் ஜானுவின் வலிமையை தோரின் வலிமையுடன் ஒப்பிட்டு, தோர் தனது சுத்தியலை கைவிட வேண்டிய நேரம் என கிறிஸ் ஹேம்ஸ்வொர்த்தையும் டேக் செய்து பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த தோர் கதாநாயகன் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மீரா பாய் ஜானுவை பாராட்டி, அவள் தகுதியானவள், வாழ்த்துக்கள், சாய்கோம், நீங்கள் லெஜண்ட் என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ஜானு, மிக்க நன்றி ஹேம்ஸ்வொர்த், எப்போதும் உங்களை பார்க்க விரும்புகிறேன் என நன்றி தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது தோர் ரசிகர்கள் மற்றும் மீரா பாய் ஜானு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.