சென்னை SRM கல்லூரியில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை

SRM கல்லூரியி தங்கி படித்து வந்த மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இந்து (27) என்ற மாணவி செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள SRM மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் முடித்துவிட்டு, பல்மருத்துவ மேற்படிப்பிற்காக எம்டிஎஸ் படித்து வந்துள்ளார். மேலும் அதே பல் மருத்துவமனை கல்லூரியில் மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, இந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில் இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த மாதம் 11ஆம் தேதி அன்றி மாரடைபால் உயிரிழந்துள்ளார்.

இதனால் இந்து மனஉளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே SRM மருத்துவ கல்லூரியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *