LCH MK III ஹெலிகாப்டரை வாங்கும் மொரிஷியஸ்..? இந்தியா மொரிஷியஸ் இடையே ஒப்பந்தம்..!

மொரிஷியஸ் இந்தியாவிடம் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை வாங்க உள்ளது. இதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL) மற்றும் மொரீஷியஸ் இடையே மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரை (ALH MK III) ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஹெலிகாப்டர் மொரிஷியஸ் காவல்துறை பயன்பாட்டுக்காக அந்நாடு வாங்குகிறது. மொரிஷியஸ் அரசு ஏற்கனவே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் மற்றும் Do-228 விமானங்களை பயன்படுத்தி வருகிறது.

மொரிஷியஸ் மற்றும் இந்தியா இடையே மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் வணிக உறவுகளை இந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பித்துள்ளதாக HAL நிறுவனம் தனது அறிகையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இந்த ALH MK III ஆனது 5.5 டன் எடை கொண்ட மல்டி-ரோல் மற்றும் மல்டி-மிஷன் பல்துறை ஹெலிகாப்டர் ஆகும். இன்று வரை 335க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 3,40,000 பறக்கும் நேரத்தை பதிவு செய்துள்ளது.

Also Read: ஹெலிகாப்டர் ஒப்பந்தம் ரத்து.. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை..

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் இயற்கைபேரிடர்களின் போது ஏராளமான உயிர்காக்கும் பணிகள் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு தனது திறமையை நிறுபித்துள்ளது. மேலும் வாடிக்கையாளருக்கு சேவை திறனை உறுதி செய்யும் நோக்கில் தொழிற்நுட்ப உதவி மற்றும் தயாரிப்பு ஆதரவையும் HAL வழங்குகிறது.

Also Read: இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணை வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ஒப்புதல்..

இந்திய இராணுவம் LCH MK III ஹெலிகாப்டரை இயக்கி வருகிறது. மேலும் இந்திய கடற்படையும் கடந்த ஆண்டு அதன் முதல் படைபிரிவை இயக்கி வருகிறது. HAL பொது மேலாளர் பிகே திரிபாதி மற்றும் மொரிஷியஸ் அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக உள்துறை செயலர் ஓகே தாபிடின் ஆகியோர் கான்பூரில் உள்ள HAL போக்குவரத்து விமான பிரிவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.