ராஜஸ்தானில் நுபுர் சர்மாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த மௌலானா கைது..

பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த மௌலானா முப்தி நதீமை பூண்டி கோட்வாலி போலிசார் கைது செய்துள்ளனர். கன்ஹையா லால் கொலை செய்யப்பட்டதில் இருந்தே மௌலானாவையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை சந்திக்க முஸ்லிம் சமூகத்தினர் சென்றபோது, பூண்டி ஆட்சியர் அலுவலகத்தில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மௌலானா முஃப்தி ஆவேசமடைந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

மௌலானா கூறுகையில், நிர்வாகம் சட்டத்திற்கு எதிரானது அல்ல என கூறினால் நாங்கள் சட்டத்திற்கு எதிராக செல்வோம். இது சட்டத்திற்கு எதிரானது என்றால், நிர்வாகமும் மத்திய அரசும் கேட்க வேண்டும். அவள் என் எஜமானருக்கு எதிராக அவதூறு செய்திருக்கிறாள். எனவே அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால், முஸ்லிம்கள் விஷயத்தை தங்கள் கைகளில் எடுத்து கொள்வார்கள்.

நீங்கள் என்னை துஷ்பிரயோகம் செய்யலாம், நான் பொறுத்து கொள்வேன். என் தந்தையை துஷ்பிரயோகம் செய்யலாம், நான் பொறுத்து கொள்வேன். நீங்கள் என் குடும்பத்தை துஷ்பிரயோகம் செய்யலாம், நான் பொறுத்து கொள்வேன். ஆனால் என் நபிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசினால் உன் நாக்கு அறுக்கப்படும்.

நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தினால், கைகள் வெட்டப்படும். உங்கள் விரலை உயர்த்தினால் வெட்டப்படும். கண்களை உயர்த்தினால், கண்ணை பிடுங்கி எறிவோம். அதன் பிறகு எங்களை சிறையில் தள்ளலாம் அல்லது லத்தி சார்ஜ் செய்யலாம். நாங்கள் பொறுத்து கொள்வோம். ஆனால் நபிக்கு எதிரான ஒரு வார்த்தையை கூட எங்களால் பொறுத்து கொள்ள முடியாது என மௌலானா கூறினார்.

இதனை அடுத்து அவர் மீது புகார் குவிந்ததால் பூண்டி காவல் நிலைய போலிசார் கைது செய்தனர். மௌலானா கைது செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் முன்பு இஸ்லாமியர்கள் குவிந்ததால் பதற்றம் நிலவி வருகிறது. கன்ஹையா லாலை கொலை செய்தவர்கள் ஒரு மாதத்திற்குள் தூக்கில் போடப்படுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.