பாஜகவில் இணைந்தார் மஞ்சிந்தர் சிங் சிர்சா.. அதிர்ச்சியில் சிரோமணி அகாலி தளம்..

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழுவின் தலைவரும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா நேற்று மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கஜேந்திரசிங் ஷெகாவாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழிவின் (DSGMC) தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவர் பாஜகவில் இணைந்துள்ளார். சிர்ஜா தனது ட்வீட்டில், என்னுடன் பணியாற்றிய அனைத்து அலுவலக பணியாளர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் மக்களுக்கு நன்றியுடன் DSGMC பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.

வரவிருக்கும் DSGMC உள் தேர்தலில் போட்டியிடமாட்டேன். என் சமூகம், மனிதநேயம் மற்றும் தேசத்திற்கு சேவை செய்ய உள்ளேன். குருத்வாரா குழு மூலம் நாட்டிற்கும் மனித குலத்திற்கும் நான் சேவை செய்துள்ளேன். அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா அவர்களுக்கு நன்றி என சிர்சா தெரிவித்துள்ளார். சிர்சா 2013 முதல் பொதுச்செயலாளராகவும், 2019 முதல் தலைவராகவும், DSGMC தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் இரண்டு முறை ரஜோரி கார்டனில் இருந்து அகாலி தளம் MLAவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கஜேந்திர சிங் ஷெகாவாத் கூறுகையில், வட இந்திய அரசியலில் மஞ்சிந்தர் சிர்சாவுக்கு முக்கிய இடம் உண்டு. கட்சியில் சிர்சாவின் வருகை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு உத்வேகத்தை அளிக்கும் என கூறியுள்ளார். ஜே.பி.நாட்டா கூறுகையில், சிர்சாவை வரவேற்கிறேன். அவரது அனுபவம் நிச்சயம் தேர்தலில் உதவும் என கூறியுள்ளார்.

சிர்ஜா சர்ச்சைக்குறிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தவர். இவர் தேசிய அளவில் அகாலி தளத்தின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டவர். சிர்ஜா பாஜகவில் இணைந்தது அகாலி தளத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டத்தை ரத்து செய்தபோது அதனை வரவேற்று சிர்ஜா ட்வீட் செய்திருந்தார்.

Also Read: மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான இரயில் தூண் பாலத்தை கட்டமைத்து வரும் இந்தியன் ரயில்வே..

அகாலி தள மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான தல்ஜித் சிங் சீமா கூறுகையில், பாஜக கீழ் மட்ட அரசியலில் ஈடுபட்டு வருகிறது. சிர்ஜாவை வலுகட்டாயமாக பாஜகவில் சேர்த்துள்ளனர். சிர்ஜா மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 DSGMC உறுப்பினர்கள் மீது கடந்த சில மாதங்களாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநீதி மற்றும் அவருக்கு எதிரான வழக்கை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக சிர்ஜா பாஜகவில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது என சீமா கூறியுள்ளார். இருப்பினும் அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் தேர்தல் வர உள்ள நிலையில் சிர்ஜாவின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்ந்தலை சந்திக்க உள்ள நிலையில் சிர்சாவின் வருகை பாஜகவின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Also Read: காங்கிரஸ் கட்சியின் ரேபரேலி தொகுதி MLA அதிதி சிங் மற்றும் சிக்ரி MLA பந்தனா சிங் பாஜகவில் இணைந்தனர்..

Leave a Reply

Your email address will not be published.