மத்திய பிரதேசத்தில் விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 13 கிராம் எடையுள்ள வைரம் கண்டெடுப்பு..
மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் விவசாயி முலாயம் சிங் என்பவர் சுரங்கத்தில் 13.47 கேரட் வைரத்தை கண்டெடுத்துள்ளார். இதன் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
பன்னா மாவட்டம் வைர சுரங்கங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு ஏற்கனவே நிறைய விவசாயிகள் வைர சுரங்கத்தில் இருந்து நிறைய வைரங்களை வெட்டி எடுத்து பணக்காரர்களாக மாறியுள்ளனர்.இந்த நிலையில் முலாயம் சிங் ஆறு பங்குதாரர்களுடன் வைர சுரங்கத்தில் வேலையை தொடங்கியபோது 13.47 கிராம் எடையுள்ள வைரம் கிடைத்துள்ளது.
வைர அலுவலகத்தை சேர்ந்த அனுபம் சிங் கூறுகையில் இந்த வைரத்தின் மதிப்பு 50 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு விதிகளின்படி ஏலத்தின் மூலம் உண்மையான விலை தெரியவரும் என கூறினார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம் அரசின் ராயல்டி மற்றும் வரி போக மீதி பணம் விவசாயிக்கு வழங்கப்படும்.
முலாயம் சிங் கூறுகையில், தனக்கு வைரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு ஆறு பங்குதாரர்கள் இருப்பதாகவும், ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை அவர்களுடன் சரிசமமாக பிரிக்க உள்ளதாக தெரிவித்தார். தனக்கு கிடைக்கும் பணத்தை தனது குழந்தைகளின் கல்விக்கு செலவிட உள்ளதாக கூறினார்.
Also Read: இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் முன்னாள் ஷியா வக்ஃப் வாரிய தலைவர்..
அரசாங்க அறிக்கையின் படி பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் காரட் வைரம் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச அரசு பன்னா மாவட்டத்தில் வைரம் இருப்பதாக கூறப்படும் நிலங்களை குத்தகைக்கு விடுகிறது. இந்த நிலத்தை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து வைரங்களை எடுத்து வருகின்றனர்.
வைரத்தை எடுத்து மாவட்ட வைர சுரங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் வைரத்தை ஏலம் விட்டு அரசின் ராயல்டி மற்றும் வரி போக மீதி பணத்தை விவசாயிகளிடம் வழங்கி விடுவார்கள். ஏற்கனவே இந்த மாவட்டத்தில் பல விவசாயிகள் பெரிய அளவிலான வைரத்தை எடுத்துள்ளனர்.
Also Read: நாகலாந்தில் மாவோயிஸ்டுகள் என தவறாக நினைத்து தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 14 பேர் பலி..