விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த நபர் சென்னையில் கைது.. NIA அதிரடி..

பாகிஸ்தானில் இருந்து போதை மருந்து மற்றும் ஆயுதங்களை கடத்தி வந்ததாக இலங்கையை சேர்ந்த விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினர் சத்குணத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்னையில் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து லட்சத்தீவு வழியாக இலங்கை மூலம் போதை பொருட்கள் தமிழகத்திற்குள் வருகின்றன.

லட்சத்தீவில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்ததால் தான் மத்திய அரசு லட்சத்தீவுக்கான புதிய விதிமுறையை அறிவித்தது. இந்த புதிய விதிமுறைக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த மார்ச் 18 ஆம் தேதி இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று லட்சத்தீவு அருகே வந்ததை கடலோர காவல்துறையினர் கண்டறிந்தனர்.

சந்தேகத்தின் பேரில் படகை சோதனையிட்டதில் அதில் 5 AK 47 துப்பாக்கிகள், 1000 மிமீ வெடிமருந்துகள் மற்றும் 300 கிலோ ஹெராயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. படகில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதில் படகு பாகிஸ்தானில் இருந்து இலங்கை நோக்கி செல்வது தெரியவந்தது.

Also Read: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரு விரல் சோதனை நடத்தப்படவில்லை: விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சவுதாரி

பிறகு கடலோர காவல்படையினர் அவர்களை கைது செய்து படகை பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் புகாரின் பேரில் இலங்கையை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் சத்குணம் மீதும் ஆயுதம் மற்றும் போதைபொருள் கடத்தல் வழக்கு பதியப்பட்டது.

Also Read: காபூலில் குண்டுவெடிப்பு.. அதற்கு காரணமான ஐஎஸ் அமைப்பினரை தேடி வரும் தாலிபான்கள்..

இந்த நிலையில் தான் சத்குணம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சத்குணம் விடுதலை புலிகள் அமைப்பை மீண்டும் விரிவாக்கம் செய்ய இந்தியாவில் சில முக்கியமானவர்களுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி..?

Leave a Reply

Your email address will not be published.