லவ் ஜிகாத்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி கான்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

உத்திர பிரதேசம் கான்பூரில் லவ் ஜிகாத் தொடர்பான வழக்கை விசாரித்த கான்பூர் மாவட்ட நீதிமன்றம் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 30,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையில் 20,000 ரூபாய் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றவாளி தனது மத அடையாளத்தை மறைத்து சிறுமியை ஏமாற்றியுள்ளதாகவும், ஜாவேத் என்ற முன்னா சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காராம் செய்ததாகவும் மாவட்ட அரசு வழக்கறிஞர் க்ரைம் திலீப் குமார் அவஸ்தி கூறியுள்ளார். இந்த லவ் ஜிகாத் வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி-13 பவன் ஸ்ரீவஸ்தவா விசாரித்து குற்றவாளிக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த லவ் ஜிகாத் வழக்கு மே 15, 2017 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூஹி போலிஸ் ஸ்டேசன் பகுதியின் ரா காலணியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஜாவேத் என்ற இஸ்லாமிய இளைஞன் தன்னை ஒரு இந்து என அடையாளப்படுத்தி கொண்டு தன் பெயரை முன்னா என கூறியுள்ளான். பின்னர் இருவரும் நெருங்கி பழக அது காதலாக மாறியுள்ளது.

ஜாவேத் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்றுள்ளான். சிறுமியின் குடும்பத்தினர் மகள் காணாமல் போனதை அடுத்து ஜூஹி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மறுநாளே ஜாவேத்தை கைது செய்து சிறுமியை மீட்டனர்.

Also Read: பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவுக்கு சமாஜ்வாதி MP ஷபிகுர் ரஹ்மான் எதிர்ப்பு..

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், ஜாவேத் மீது போக்சோ மற்றும் பலாத்கார வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் 164ன் அறிக்கையில், ஜாவேத் தன்னை ஒரு இந்து என கூறி அறிமுக படுத்திக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று, வீட்டை அடைந்ததும், தனது உண்மையான மதத்தை வெளிபடுத்தி நிக்காஹ் செய்யும்படி சிறுமியை ஜாவேத் கட்டாயப்படுத்தி உள்ளான்.

Also Read: லட்சத்தீவில் மத அடிப்படையில் இருந்த அரசு விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை என மாற்றம்..?

இதற்கு சிறுமி மறுக்கவே, ஜாவேத் பலவந்தமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். உத்திர பிரதேசத்தில் 13 மாதங்களுக்கு முன்பு நவம்பர் 21, 2020 அன்று, சட்ட விரோத மதமாற்றத்திற்கு எதிராக ‘உத்திர பிரதேச சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசர சட்டம் 2020’ என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி, கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல், கவர்ச்சி, ஆசை வார்த்தை மற்றும் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுதல் ஆகியவற்றின் கீழ் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவது சட்ட விரோதம் ஆகும். அவ்வாறு மதம் மாற்றினால் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

Also Read: திருமண வயதை உயர்த்தும் முடிவு பெண்களுக்கு மகிழ்ச்சியும், சிலருக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது: பிரதமர் மோடி

மேலும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உண்டு. அதன் அடிப்படையில் குற்றவாளியின் மீது மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளது. மதமாற்ற தடை சட்டம், உத்திர பிரதேசத்திற்கு முன்பே மத்திய பிரதேசத்தில் இயற்றப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா, ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. அரசு வழக்கறிஞர் திலீப் குமார் கூற்றுப்படி, ஜூலை 2021 வரை மாநிலம் முழுவதும் 162 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. லவ் ஜிகாத் வழக்கில் தற்போது தான் முதன்முறையாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக திலீப் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.