லவ் ஜிகாத்: இந்து பெண்ணை வலுகட்டாயமாக திருமணம் செய்து மதம் மாற்றியவர் மீது வழக்குபதிவு..

உத்திரபிரதேசம் மாநிலம் பரேலியில் உள்ள இசத்நகர் பகுதியில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞன் இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் திருமணம் செய்து வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உளள பிஹார்மான் நாக்லா பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், கான்டா டெய்ரிக்கு அருகில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு கணினி பாடத்திற்காக தினமும் சென்று வந்துள்ளார். அங்கு இம்ரான் என்ற இளைஞனை பெண் சந்தித்துள்ளார். இம்ரான் தன்னை ஒரு இந்துவாக அடையாளம் காட்டிகொண்டு தனது பெயரை சுரேந்திர சிங் என அறிமுகமாகியுள்ளார்.

பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய இம்ரான் அவரை நம்ப வைப்பதற்காக அந்த பெண்ணுடன் கோவிலுக்கு செல்வது, விரதம் இருப்பது போலவும் நடித்துள்ளார். பின்னர் பெண்ணுடன் உடலுறவு வைத்து கொண்டு அவருக்கு தெரியாமல் எடுத்த புகைப்படத்தை காட்டி அப்பெண்னை மிரட்டி இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

இல்லையென்றால் அவரது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியுள்ளார். மே 26, 2020 ஆம் ஆண்டு இமரான் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து அந்த பெண்ணுக்கு சானியா கான் என பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இம்ரானும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை மாட்டிறைச்சி சாப்பிடவும், நமாஸ் செய்யவும், புர்கா அணியவும் வற்புறுத்தியுள்ளனர்.

அவரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் உணவு மற்றும் தண்ணீர் தராமல் கொடுமை படுத்தியுள்ளர். இரண்டு வருட கொடுமைக்கு பிறகு அங்கிருந்து தப்பிவந்த அந்த பெண் இசத்நகர் காவல் நிலையத்தில், இம்ரான், அவரது தாயார் ரிபாத் பீபி, சகோதரர்கள் மிஸ்ரியார் கான், குர்ஷித் கான், இர்ஷாத் கான், மைத்துனர்கள் அஃப்தாப் மற்றும் மொயின் கான் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 420, 498ஏ, 376(2), 323, 504, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.