இந்தியாவின் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த லாக்ஹீட் மார்ட்டின்..!

சென்னையை தளமாக கொண்ட ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் மற்றும் லாக்ஹீட் மார்ட்டினின் கனடா CDL சிஸ்டம்ஸ் ஆகியவை கருடா ஏரோஸ்பேஸின் மேட் இன் இந்தியா ஆளில்லா விமானங்களை லாக்ஹீட் மார்ட்டின் கனடா CDL சிஸ்டமின் வான்வழி அமைப்பு மென்பொருள் திர்வுகளுடன் ஒருங்கிணைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

விவசாயம், சுரங்கம், பெரிய அளவிலான மேப்பிங் மற்றும் தொழில்துறை ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய ட்ரோன் அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு தரவு செயலாக்க திறனை உருவாக்குவதற்கு இரு நிறுவனங்களும் நெருக்கமாக செயல்படும் என கருடா ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

கருடா ஏரோஸ்பேஸின் CEO அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், லாக்ஹீட் மார்ட்டின் கனடா CDL சிஸ்டம்ஸ் உடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டாண்மை பல துறைகளில் சந்தை மேலாண்மையை உறுதி படுத்த வலுவான போட்டியை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

லாக்ஹீட் மார்ட்டின் கடனடா CDL சிஸ்டம்ஸ் பொது மேலாளர் மைக்கேல் பேக்கர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குழு அன்குருடு ஏரியல் சிஸ்டம்ஸ் சந்தைக்கான மேம்பட்ட மென்பொருள் தீர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தையும் அனுபவத்தையும் மேட் இன் இந்தியா ட்ரோன்களுக்கு கொண்டு வர கருடா ஏரோஸ்பேஸுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.

இந்தியாவில் உலக தரம் வாய்ந்த ட்ரோன் மென்பொருள் தீர்வுகளை கொண்டு வருவதற்கும், உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இது ஒரு படியாக இருக்கும் என மைக்கேல் தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆளில்லா ட்ரோன் தொழிற்சாலையை அமைப்பதற்காக மலேசிய ட்ரோன் நிறுவனமான ஹீல்சி ட்ரோன் நிறுவனத்துடன் இணைந்து கருடா ஏரோஸ்பேஸ் பணியாற்றி வருகிறது.

அதேபோல் ஆகஸ்டு மாதம், ஜிம்பாப்வேயில் விவசாய துறைக்கு ட்ரோன்களை வழங்க ஹ்ராரே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் நியாங்கனி மெய்நிகர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. கருடா ஏரோஸ்பேஸ் ஜூன் மாதத்தில் 250 மில்லியன் மதிப்பீட்டில் 30 மில்லியன் சீரிஸ் ஏ ரவுண்டை தொடங்கியது.

இந்த நிறுவனத்தில் மகேந்திரசிங் தோனி முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். கருடா ஏரோஸ்பேஸ் 400 ட்ரோன் படை மற்றும் 26 நகரங்களில் 500 க்கும் மேற்பட்ட நன்கு பயிற்சி பெற்ற விமானிகளை கொண்டுள்ளது. எதிர்காலத்தில் கருடா இந்தியாவின் முதல் ட்ரோன் யூனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.