மகாராஷ்ட்ராவில் மீண்டும் லாக்டவுன்.. முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்ட்ராவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று இரவு 8:30 மணிக்கு மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சமூக ஊடகங்கள் மூலம் நேரடியாக உரையாற்ற உள்ளார்.

இந்த முறை கடந்த ஆண்டை போலவே முழுமையான லாக்டவுன் இருக்காது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய விதிமுறைகள், வழிகாட்டுதல்களை முதலமைச்சர் கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்து செயல்பட அனுமதி வழங்கலாம் என்றும், அத்தியாவசிய அலுவலகங்கள் தவிர மற்ற தனியார் அலுவலகங்கள் மூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் தியேட்டர்கள், ஜிம்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மைதானங்கள் என அனைத்தும் மூடப்பட வாய்ப்புள்ளது.

அதேபோல் பொது இடத்தில் ஒன்று கூடுவது, மத வழிபாட்டு தளங்கள் ஆகியவைகளுக்கு கட்டுபாடுகள் இருக்கும் என கூறப்படுகிறது. நேற்று மகாராஷ்ட்ராவில் 258 இறப்புகளும், புதிதாக 51,750 கொரோனா தொற்றுகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் தான் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று 63,290 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *