சீனாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் லிதுவேனியா. தைவானில் தூதரகத்தை திறக்க முடிவு.. எச்சரிக்கும் சீனா..

சீனா மற்றும் லிதுவேனியா இடையே ஏற்கனவே தைவான் தொடர்பாக மோதல் இருந்துவரும் நிலையில், தற்போது லிதுவேனியா சீனாவை மேலும் வெறுப்படைய செய்துள்ளது. இதற்கு சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தைவான் தங்கள் தூதரகத்தை சீன தைபே என அழைக்க வேண்டாம், தைவான் பிரதிநிதி அலுவலகம் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டது. ஏனென்றால் தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் எந்த நாடும் தைவானை அங்கிகரிக்கவில்லை. தூதரக உறவு வைத்திருந்தாலும் சீன தைபே என்று தான் உள்ளது.

அதனால் தைவான் கேட்டுகொண்டதன் பேரில் ஐரோப்பிய நாடான லிதுவேனியா தைவான் பிரதிநிதி அலுவலகம் என பெயர் மாற்றி புதிய உண்மையான அலுவலகத்தை திறந்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன மொபைலை தடை செய்து லிதுவேனியா உத்தரவிட்டது. சீன மொபைல்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டது.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற சீனா லிதுவேனியாவில் உள்ள தனது தூதரை திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் சீனாவில் உள்ள லிதுவேனியா தூதரையும் நாட்டைவிட்டு வெளியேற்றியது. இந்த நிலையில் நேற்று லிதுவேனியா தனது அமைச்சர்களை தைவானுக்கு அனுப்பியுள்ளது. லிதுவேனியா மட்டும் இல்லாமல் லாட்வியா மற்றும் எஸ்டோனியா நாட்டு அமைச்சர்களும் தைவான் வந்துள்ளனர்.

Also Read: சீனாவின் கடன் பொறியில் சிக்கிய உகாண்டா.. தனது ஒரே சர்வதேச விமானநிலையத்தை இழக்கிறது..

டிசம்பர் 2 அன்று தைவான் வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்படும் 2021 திறந்த நாடாளுமன்ற மன்றத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் தைவான் வந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இருந்து டிசம்பர் 2 அன்று நடக்கவிருக்கும் கூட்டத்தில் 10க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் லிதுவேனியாவும் விரைவில் தைவானில் தனது தூதரகத்தை திறக்க உள்ளது.

Also Read: இன்டர்போலின் ஆசியாவிற்கான பிரதிநிதி தேர்தலில் இந்தியா வெற்றி.. சீனாவிற்கு எதிர்ப்பு..

லிதுவேனிய பாராளுமன்றத்தின் தைவான் நட்புக்குழுவின் தலைவர் மாதாஸ் மால்டிகிஸ் கூறுகையில், தைவானுடன் இன்னும் பலபான உறவை கட்டமைக்க விரும்புகிறோம். தைவானுடன் எங்களுக்கு உள்ள ஒற்றிமையை வெளிப்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம். தைவானில் அமையவுள்ள லிதுவேனியா தூதரகத்தின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை விரிவுபடுத்தவும், தைவான் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என கூறினார். குட்டி ஐரோப்பிய நாடான லிதுவேனியா சீனாவை எதிர்க்க துணிந்து இருப்பது பல வல்லரசு நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

Leave a Reply

Your email address will not be published.