HAL நிறுவனம் 3 இலகுரக ஹெலிகாப்டரை இந்திய இராணுவத்திற்கு வழங்க உள்ளது?

மார்ச் 31க்கு முன்னதாக மூன்று லைட் காம்பாட் ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல் வழங்க உள்ளது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லைட் காம்பாட் ஹெலிகாப்டர், லடாக், லேயில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

அடுத்த நிதியாண்டில் மேலும் 12 ஐ வழங்கும். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மூன்று உள்நாட்டு இலகுரக ஹெலிகாப்டரின் (LCH) முதல் டெலிவரியை மார்ச் 31க்கு முன்னர் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

HAL ராணுவம் மற்றும் விமானப்படையிடம் இருந்து ஒரு கடிதம் பெற்றுள்ளது. அதில் அடுத்த நிதியாண்டுக்குள் மீதமுள்ள 12 ஹெலிகாப்டர்களை வழங்க வேண்டும் என்பதாகும்.

இந்த மாத தொடக்கத்தில், பாதுகாப்பு அமைச்சகம் அதன் ஆண்டு அறிக்கையில் HAL இருந்து இலகுரக ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தங்கள், இஸ்ரேலில் இருந்து கூடுதல் ஹாரோப் (P-IV) ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAV) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் 2021 முதல் காலாண்டில் கையெழுத்திடப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஆர்மி வேரியண்ட், லைட் யுடிலிட்டி ஹெலிகாப்டரின் (LUH) அனைத்து சோதனைகளையும் முடித்து கடந்த செப்டம்பரில் அதன் உயர் திறனை நிரூபித்துள்ளது. ஏரோ இந்தியாவில் அதன் ஆரம்ப செயல்பாட்டு அனுமதி (IOC)ஐ பெற திட்டமிடப்பட்டுள்ளது. “DAC யிலிருந்து 12 இலகுரக ஹெலிகாப்டர்-க்கான தேவையை ஏற்றுக்கொள்ளவும் (Acceptance of Necessity or AoN) திட்டத்தில் உள்ளது,” என்று அதிகாரி கூறினார்.

சிறிய அளவிலான HAL சேவையில் உள்ள எம்.ஐ-17 ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக 12 டன் இந்திய மல்டி ரோல் ஹெலிகாப்டரை (IMRH) பயன்படுத்தப்பட உள்ளன. ராணுவமும் விமானப்படையும் சேவைத் தர தேவைகளை (Service Quality Requirements or SQR) உருவாக்கி வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

LCH மற்றும் LUCH எனப்படும் அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர் (ALH) ஆகியவை ஏரோ இந்தியா விமான நிலையத்தில் இந்திய பெவிலியனின் உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

LUH என்பது மூன்று டன் ஹெலிகாப்டர் ஆகும். இது சீட்டா மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அமைந்துள்ளது. HAL கருத்துப்படி, இது மணிக்கு 220 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *