நீர்மூழ்கி கப்பல் தொடர்பான தகவல் கசிவு.. கடற்படை அதிகாரிகளை கைது செய்தது CBI..

நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்களை கசிய விட்டதாக மூன்று கடற்படை அதிகாரிகளை மத்திய புலனாய்வு பிரிவு (CBI) கைது செய்துள்ளது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திய நீர்மூழ்கி கப்பலை நவீன மயமாக்குதல் தொடர்பான ரகசியங்களை இந்திய கடற்படையில் தற்போது பணியாற்றும் அதிகாரி ஒருவர், ஓய்வு பெற்ற இரண்டு கடற்படை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த மூன்று அதிகாரிகளையும் உளவுத்துறை அதிகாரிகள் நீண்ட நாட்களாக கண்காணித்து வந்த நிலையில் ரகசிய தகவலை அடுத்து அவர்களை CBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் மும்பையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த தகவல் கசிவு இந்திய கடற்படைக்கு அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில காலமாகவே இதுபோன்ற தகவல் கசிவு நடந்து வருகிறது. இந்திய இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானிற்கு அனுப்பி பணம் பெற்று வருவதாக புகார்கள் அடிக்கடி வருகிறது. புகாரின் அடிப்படையில் உளவுத்துறையினர் மூவரையும் கண்காணித்து வந்தனர்.

Also Read: நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் டார்பிடோக்கள்.. இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம்..

உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் CBI மூவரையும் கைது செய்துள்ளனர். பெரும்பாலும் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மறுசீரமைத்து இந்திய கடற்படை பயன்படுத்தி வருகிறது. மேலும் இதுபோன்ற வேறு ஏதாவது தகவல் கசிவு நடைபெற்றுள்ளதா என இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Also Read: பாகிஸ்தான் கடற்பரப்பில் நுழைந்த இந்திய நீர்மூழ்கிகப்பல்.. பாகிஸ்தான் எதிர்ப்பு..

Also Read: இந்தியா வரும் நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் விமானம்.. சீனாவுக்கு எதிராக களமிறக்க திட்டம்..

Leave a Reply

Your email address will not be published.