நேபாளத்தில் மீண்டும் பிரதமர் ஆனார் கே.பி.சர்மா ஒலி..

நேபாளத்தில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கே.பி. சர்மா ஒலி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி மற்ற கட்சிகளை ஆட்சி அமைக்க உரிமை கோரி காலக்கெடுவை விதித்தார்.

யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் கே.பி.சர்மா ஒலியை மீண்டும் பிரதமராக அறிவித்தார் ஜனாதிபதி இருப்பினும் கே.பி.சர்மா ஒலி ஒரு மாதத்திற்குள் பெரும்பான்மையை நிறுபிக்க வேண்டும். தவறினால் மற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்.

யாருக்குமே பெரும்பான்மை இல்லை என்றால் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆதரவுடன் பிரதிநிதி ஒருவர் பிரதமராக அறிவிக்கப்படுவார். எதிர்கட்சிகளுக்கு கொடுத்த காலக்கெடு வியாழக்கிழமை இரவு 9 மணியோடு நிறைவடைந்ததால் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி கே.பி.சர்மா ஒலியை பிரதமராக அறிவித்துள்ளார்.

கே.பி.சர்மா ஒலி சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். இவர் இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்தியா தங்களது நிலத்தை ஆக்கிரமித்துவிட்டதாக கூறி புதிய வரைப்படம் ஒன்றை வெளியிட்டார். இது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நேபாளத்தை சேர்ந்தவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இந்தியாவிற்கு வந்து செல்லும் நிலையில் சர்மா ஒலியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. சீனாவின் தூண்டுதலினாலயே சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் தான் சர்மாவின் ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இருப்பினும் யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராததால் ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி மீண்டும் கே.பி.சர்மா ஒலியை பிரதமராக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *