KGF 2 டீசரில் புகைப்பிடிக்கும் காட்சி; விளக்கம் கேட்டு கர்நாடக சுகாதாரத்துறை நோட்டீஸ்
KGF Chapter 2 ட்ரைலரில் நடிகர் யாஷ் புகைபிடிப்பது போன்று காட்சி வெளியாகி உள்ளது. அந்த காட்சிக்கு விளக்கம் கேட்டு நடிகர் யாஷ் மற்றும் படகுழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த காட்சியை நீக்ககோரி கர்நாடக சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 7ல் வெளியான KGF Chapter 2 ட்ரைலர் இதுவரை 148 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ட்ரைலரில் உள்ள காட்சியால் யாஷ் சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
KGF ட்ரைலரில் நடிகர் யாஷ் எந்திர துப்பாக்கியுடன் வரிசையாக நிற்கின்ற வாகனங்களை தாக்குவார். பின்பு சூடான சிவப்பு துப்பாக்கி குழாயில் சிகரெட்டை பற்றவைக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.
சட்டப்படி திரையில் புகைபிடிக்கும் காட்சி வரும்போது “புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு தரும்” அல்லது “புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும்” என்ற வாசகம் இடம்பெற வேண்டும். ஆனால் டீசரில் அந்த வாசகம் இடம்பெறவில்லை.
இந்த டீசரில் வெளியிடப்பட்டுள்ள சிகரெட் புகைக்கும் காட்சியை சமூகவலைதலங்களில் இருந்து நீக்ககோரி யாஷ்க்கு கார்நாடக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாஷ் உங்களை நிறைய ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். உங்களின் செயல்கள் இளைஞர்களை தவறாக வழிநடத்தக்கூடாது. சிகரெட் புகைப்பதற்கு எதிரான எங்களின் பிரச்சாரத்தில் நீங்கள் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தி, தமிழ்,தெலுங்கு கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 2018ல் வெளியான KGF Chapter 1 திரைப்படம் அதிரடி காட்சி அமைப்புகள் மற்றும் சிறந்த காட்சி அமைப்புகள் ஆகிய 2 பிரிவுகளில் 2019ல் இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.