காசி விஸ்வநாதர் கோவில்-ஞானவாபி மசூதி வழக்கை மார்ச் 29 அன்றைக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்…

வாரணசியின் காசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி மசூதி வளாகம் தொடர்பான வழக்குகளை மார்ச் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். வழக்கு முடியும் வரை இந்த வழக்கு நடைபெறும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

வியாழன் அன்று நடைபெற்ற விசாரணையின் போது, கோவிலின் சார்பில் ஆஜரான வக்கீல், விசேஷ பகவான் கோவில் பழங்காலத்திலிருந்தே உள்ளது என்பதும், சர்ச்சைக்குறிய இடத்தில் சுயம்பு பகவான் விசேஷேஸ்வரர் வசிக்கிறார் என்பதும் தெளிவாக தெரிகிறது. எனவே சர்ச்சைக்குரிய நிலம் விஷேச பெருமானுக்கு சொந்தமானது என வாதிட்டார்.

மேலும் கோவிலின் தரைத்தளத்தில் உள்ள பாதாள அறை என்றும் அது 15 ஆம் நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்ட ஒரு அமைப்பு என வாதிட்டார். வழிப்பாட்டு தலத்தின் மதத் தன்மை ஆகஸ்டு 15, 1947 இல் இருந்ததை போலவே இருந்தது. எனவே வழிப்பாட்டு தல சட்டம் 1991 இன் விதிகளை பயன்படுத்த முடியாத என வாதிட்டார்.

Also Read: விஸ்வ கல்யாண் மகாயக்யா மூலம் இந்து மதத்திற்கு திரும்பிய 1250 கிறிஸ்துவர்கள்..

வாரணாசியை சேர்ந்த அஞ்சுமன் இன்டாஜாமியா மஸ்ஜித் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ் பாடியா, அடுத்த விசாரணையை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். வாரணசியின் சிவில் நீதிபதி ஏப்ரல் 8, 2021 அன்று விசாரித்த விரைவு நீதிமன்றம் காசி விஸ்வநாதர் கோயில்-ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு உத்தரவிட்டது.

மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்பட்டதாக என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது. பின்னர் செப்டம்பர் 9, 2021 அன்று உயர்நீதிமன்றம், வாரணாசி நீதிமன்றத்தின் ஏப்ரல் 8, 2021 அன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கு இடைகால தடைவிதித்த நீதிமன்றம், விரிவான உடல் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

Also Read: உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம்.. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதி..!

Leave a Reply

Your email address will not be published.