கர்நாடகா ஹிஜாப் விவகாரம்.. இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பிய பாகிஸ்தான்…

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு முஸ்லிம் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் தேசிய மகளிர் உரிமை ஆணையத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்து மாணவ மாணவிகளும் காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனை அடுத்து கர்நாடகாவில் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இடைகால தடைவிதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் விரிவான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடகாவில் சில பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான மத சகிப்பின்மை, பாகுபாடு ஆகியவற்றில் பாகிஸ்தான் ஆழ்ந்த கவலையை கொண்டுள்ளது.

கர்நாடகாவில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்களை இந்திய அரசு கைது செய்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிபடுத்த வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, முஸ்லிம் பெண்களின் கல்வியை மறுப்பது அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும் என கூறியுள்ளார்.

Also Read: சிதறும் பாகிஸ்தான்.. இராணுவதின் மீது தாக்குதல் நடத்தும் பலூச் போராளி குழுக்கள்..

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் ஃபவாத் ஹுசைன் கூறுகையில், ஹிஜாப் அணிவதும் தனிப்பட்ட விருப்பம் என்றும், மற்றவர்களை போலவே இஸ்லாமியர்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இந்தியாவை இழிவுபடுத்தும் சதியின் ஒரு பகுதியாக சிலர் ஆடை கட்டுபாடு மற்றும் நிறுவனங்களின் ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கிறார்கள்.

Also Read: பாகிஸ்தானில் கடந்த 6 மாதங்களில் 2,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல்..

சிறுபான்னையினருக்கு குற்றம் மற்றும் கொடுமைகளின் காடாக இருக்கும் பாகிஸ்தான் சகிப்புதன்மை மற்றும் மதச்சார்பின்மை பற்றி இந்தியாவுக்கு போதிக்கின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் சமூக, கல்வி, மத உரிமைகள் வெட்ககேடான முறையில் நசுக்கப்படுகின்றன என்பதே எதார்த்தம். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என நக்வி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.