கான்பூர் வன்முறை: கல்லெறிபவர்களுக்கு 1,000 ரூபாய்.. பிரியாணி பாபாவை கைது செய்த போலிசார்..

ஜூன் 3 அன்று கான்பூரில் நடந்த வன்முறைக்கு நிதியளித்ததாக புதன்கிழமை அன்று பிரியாணி பாபா என அழைக்கப்படும் பாபா பிரியாணி கடையின் உரிமையாளர் முக்தர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 3 ஆம் தேதி நுபுர் சர்மாவிற்கு எதிராக கான்பூரில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், வன்முறையை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட 15-16 இளைஞர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக முக்தார் பாபாவிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது.

இதற்கான முழு திட்டமும் முக்தார் பாபா கடையில் தீட்டப்பட்டுள்ளது. வன்முறையில் கல் வீசுபவர்களுக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஒருங்கிணைப்பாளர்கள் எப்படி தனது கடையில் அமர்ந்து வன்முறை சம்பவத்தை வீடியோ அழைப்பில் நேரடியாக பார்த்தார்கள் என்பதை முக்தார் பாபா விவரித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கில் கல் வீச்சு மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு வன்முறையில் ஈடுபட்ட சிறுவர்களுக்கு பணம் கொடுத்து பிரியாணி பரிமாறப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் வழக்கை விசாரிக்குமாறு காவல்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜூன் 3 கலவரத்திற்கு பிறகு தலைமறைவாக இருந்த முக்தார் பாபாவை ஜூ 21 ஆம் தேதி கான்பூர் காவல்துறை கைது செய்தது. முக்தார் பாபா வன்முறைக்கு நிதியளித்து, முக்கிய குற்றவாளியான ஜாபர் ஹயாத் ஹஷ்மிக்கு பெரும் தொகையை வழங்கியதாக கூறப்படுகிறது. முக்தார் பாபா வன்முறை நாளில் கலவரக்காரர்களுக்கும் கல்லெறிந்தவர்களுக்கும் பிரியாணி ஊட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில உள்ளுர் தலைவர்கள் பாபா பிரியாணி கடை உண்மையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதாகவும், முக்தாரும் அவரது கூட்டாளிகளும் தங்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பை தக்க வைக்க நீண்ட காலமாக வன்முறையை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த பிரியாணி உணவகத்தை கட்டுவதற்காக பிரதான கோவில் மற்றம் 18 இந்து கடைகள் இடித்து தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்க பதிவின்படி, பாபா பிரியாணி உணவகம் இருக்கும் நிலம் ராம்-ஜாங்கி கோவிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் 3 ஆம் தேதி நுபுர் சர்மாவிற்கு எதிராக கான்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது.

Also Read: ஐநாவில் இந்தியரை பயங்கரவாதியாக அறிவிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா உட்பட 5 நாடுகள் நிராகரித்தன..

நுபுர் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த பகுதி இஸ்லாமியர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது கற்களை வீசியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. பின்னர் இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை போலிசார் கைது செய்தனர்.

Also Read: ஆர்டிகிள் 370 நீக்கிய பிறகு முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் முதல் சர்வதேச உச்சிமாநாடு..!

முக்கிய குற்றவாளியான ஹயாத் ஜாபர் ஹஷ்மி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான சட்டவிரோத சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. வன்முறைக்கு ஆதரவாக வளைகுடா நாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதியை கண்டறிய ஹஷ்மியின் தொலைபேசி உரையாடல் மற்றும் அவரது வங்கி கணக்கை போலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Also Read: ராஞ்சி விமானநிலையத்தில் அசாதுதீன் ஓவைசியை வரவேற்ற போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்..

Leave a Reply

Your email address will not be published.