ஜெய்பீம் திரைப்படம்: இந்தி பேசும் நபரை அறைந்த பிரகாஷ் ராஜ்.. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ காட்சி..

ஜெய்பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானதை அடுத்து அதில் ஒரு வீடியோ காட்சி மட்டும் சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது.

அதில் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் ஹிந்தி பேசியதற்காக ஒருவரை அடித்த காட்சி சமூகவலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் சிலர் அதற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி பேசும் நபரை அறைந்து ராஜ் தமிழில் பேச சொல்லி உள்ளார். இது இந்தி பேசுவோரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் ஒருவர், பிரகாஷ் ராஜ் இந்தியில் பேசியதற்காக அந்த நபரை அறையவில்லை. இந்தியில் பேசி அவரை குழப்ப முயற்சித்ததாலையே அவரை அடித்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஒருவர் ட்விட்டரில், நான் ஜெய்பீம் படத்தை பார்த்த பிறகு மனம் உடைந்தேன், அதில் யாருக்கும் எதிராகவும் எதுவும் இல்லை. அதில் பிரகாஷ் ராஜ் இந்தியில் பேசுபவரை அறைந்து தமிழில் பேச சொல்வார். இது தேவையற்ற காட்சி. அதனை நீக்குவார்கள் என்ன் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், தமிழ், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் தமிழில் பேசுங்கள், தெலுங்கில் பேசுங்கள் என்று கூறி இருப்பார். ஆனால் இந்தியில் மற்றும் உண்மையை பேசுங்கள் என்று கூறி இருப்பார். இது தேவையற்ற மொழி அரசியல் என கூறி உள்ளார்.

மற்றொரு பயனர், அந்த பீடா வாயனுக்கு தமிழ் தெரியும், பிறகு ஏன் தமிழ்நாட்டில் இந்தி பேசுகிறார். பிரகாஷ் ராஜிற்கு இந்தி தெரியாது. அந்த அறை தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்காக என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், அன்புள்ள பிரகாஷ் ராஜ் இந்தி அல்லது மற்ற எந்த இந்திய மொழியிலும் பேசியதற்காக அடிக்கலாம் என்று எந்த சட்ட பிரிவில் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். அதன்படி பார்த்தால் ஹிந்தி, தமிழில் பேசியதற்காக எத்தனை கன்னடர்கள் உங்களை அடிக்க வேண்டும் எனவும் கூறியிள்ளார்.

இன்னொரு ட்விட்டர் பயனர், இது இந்தி பேசும் இந்தியர்களுக்கு எதிரான கட்சி இல்லை. அவர் இந்தி பேசி தப்ப முயல்வார். அது பிரகாஷ் ராஜிற்கு புரியாது அதனால் அறைந்து தமிழில் பேச சொல்வார் என கூறி உள்ளார்.

மற்றொருவர், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள், நீங்கள் கவனமாக பார்த்தால் இந்தி பேசும் நபரும் தமிழில் பேசுவார். ஆனால் பிரகாஷ் ராஜின் போலிஸ் கதாபாத்திரத்திற்கு இந்தி தெரியாது. இதனால் அந்த நபர் இந்தியில் பேசி பிரகாஷ் ராஜை குழப்புவார். அதனாலையே அவரை அறைந்து தமிழில் பேச சொல்வார் என கூறி உள்ளார்.

இயக்குனர் தா சே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள இந்த படம் காவல்துறையின் அட்டூலியம் பற்றிய கதை. 1993 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் இருளர் சமூகத்தை சேர்ந்த செங்கேனி மற்றும் ராஜகண்ணு தம்பதியினரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் காணாமல் போன தனது கணவருக்கு நியாயம் கேட்க வழக்கறிஞர் சந்துருவின் உதவியை செங்கேனி நாடுகிறார். பின்னர் சந்துரு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *