சீனாவில் இருந்து வெளியேறுவதாக ஜப்பானின் சிப் உற்பத்தி நிறுவனம் அறிவிப்பு..

உலக மின்னணு சந்தையில் சினாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் ஜப்பான் ஏற்கனவே தனது நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் சிப் உற்பத்தியிலும் ஜப்பான் முன்னிலை பெற சீனாவில் செயல்பட்டு வரும் ஜப்பான் சிப் உற்பத்தி நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ஜப்பானை சேர்ந்த முராட்டா என்ற சிப் உற்பத்தி நிறுவனம் சீனாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்து வருவதால் தனது ஆலையை சீனாவிற்கு வெளியே நிறுவ உள்ளதாக அறிவித்து உள்ளது.

சிப் உற்பத்தியின் மையமாக ஜப்பானை மாற்றும் நோக்கில் ஜப்பான் அரசு சமீபத்தில் பல பில்லியன் கணக்கில் ஊக்கத்தொகை அறிவித்து உலக சிப் உற்பத்தி நிறுவனங்களை தனது நாட்டில் தொழில் தொடங்குமாறு கூறிவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனமான முராட்டா சீனாவில் இருந்து வெளியேறி தனது ஆலையை தாய்லாந்தில் அமைக்க உள்ளதாக கூறியுள்ளது.

இந்த புதிய ஆலை 2023 அக்டோபர் முதல் தாய்லாந்தில் செயல்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முரட்டா (Murata) நிறுவனம் சிப் உற்பத்தி மட்டும் இல்லாமல் ஐபோனுக்கான உதிரி பாகங்களையும் தயாரித்து வருகிறது. ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரித்து வழங்குகிறது.

இது தவிர ரேடியோ சிக்னல் தொடர்பான ஃபில்டர்கள், டிரான்ஸ்மிஷன் சிக்னல் பெருக்கிகள், டூப்ளெக்சர்கள் போன்ற ஸ்மார்ட்போன் பாகங்களையும் தயாரித்து வருகிறது. தற்போது முராட்டா நிறுவனம் தனது வருவாயில் பாதிக்கு மேல் சீனாவை சார்ந்து உள்ளது. எதிர்கால வளர்ச்சியை பார்க்கும் போது சீனாவில் தனது பங்கு குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முரட்டாவின் தலைவர் நோரியோ நகாஜிமா கூறுகையில், எங்கள் விநியோக சங்கிலியை பன்முகப்படுத்துவது கட்டாயம், உற்பத்தி மையமாக சீனாவின் அந்தஸ்து குறைந்து வருகிறது. தனது மாறிவரும் மக்கள் தொகையுடன் மலிவு உழைப்பு மற்றும் ஒரு பெரிய தொழிலாள வர்க்கத்தின் நன்மையை சீனா இழந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இன்று சீனா உள்ளது.

Also Read: இனப்படுகொலை செய்யும் சீனாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த உய்கூர் முஸ்லிம்கள்..

ஆனால் 2030ல் இது இந்தியாவாக இருக்கும். அதிக சாலை மக்கள்தொகை கொண்ட நாடாக ஆப்ரிக்கா இருக்கும். சீனாவின் மக்கள் தொகை வேகமாக சுருங்கி வருகிறது. அடுத்த 45 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை பாதியாக குறையும். சீனாவில் மெதுவான பிறப்பு விகிதம் 1.3 மற்றும் அதிக ஆயுட்காலத்துடன் உள்ளது. இதனால் சீனா விரைவில் முதுமை அடையும்.

Also Read: நைஜீரியாவில் சீனர்களை கடத்தி சென்று சுட்டுக்கொன்ற நைஜீரிய கொள்ளையர்கள்..

2050 ஆம் ஆண்டுக்குள் சீன மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் மூத்த குடிமக்களாக இருப்பார்கள். இது சீனாவின் உற்பத்தி திறனை பின்னுக்கு தள்ளும். இதனால் சீனாவுடன் தொடர்ந்து செயல்பட முடியாது. ஆப்பிள் போன்ற முக்கிய வாடிக்கையாளரும் சீனாவில் இருந்து விலகி செல்லும் நிலையில் தனது நிறுவனத்தை தாய்லாந்திற்கு மாற்ற உள்ளோம். முராட்டா வர்த்தகபோரை மட்டும் பார்க்கவில்லை, மக்கள்தொகையையும் பார்க்கிறோம் என முராட்டா தலைவர் நகாஜிமா கூறினார்.

Also Read: நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசிய அரசு.. நெருக்கடியில் சீனா..

Leave a Reply

Your email address will not be published.