PSLV, GSLV ராக்கெட்டிற்கு இஸ்ரோ ஓய்வு..? வருகிறது அடுத்த தலைமுறை ராக்கெட்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த தலைமுறை ராக்கெட்டை (NGLV) உருவாக்கி வருவதாகவும், விரைவில் PSLV மற்றும் GSLV ராக்கெட்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.

PSLV ராக்கெட் இன்று வரை 50க்கும் மேற்பட்ட முறை ஏவப்பட்டுள்ளது மற்றும் 30 ஏவுதலுக்கு தயாராக உள்ளது. இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் திருவனந்த்புரத்தில் நடைபெற்ற பொறியாளர்கள் கான்க்ளேவ் 2022 ல் உரையாற்றினார். சோம்நாத் கூறியதாவது, இன்று, நாளை அல்லது ஒரு தசாப்தம் கழித்து PSLV ஓய்வு பெற வேண்டும்.

1980 கால தொழில்நுட்பத்தை 2030-களில் பயன்படுத்த முடியாது, இது சரியல்ல என கூறினார். மேலும் இது GSLV ராக்கெட்டிற்கும் பொருந்தும். இருப்பினும் GSLV MK3 ராக்கெட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும். ஏனெனில் இது மற்றவைகளுடன் ஒப்பிடும் போது புதிய தொழில்நுட்பம் என தெரிவித்தார்.

பழைய ராக்கெட்டுகளுக்கு ஓய்வு அளிப்பதற்கான காரணத்தை கூறிய சோம்நாத், அவற்றின் வடிவமைப்பு 3 தசாப்தங்களுக்கும் மேலாக பழமையானது. அவற்றின் விலையை மேலும் குறைக்க முடியாது. இவற்றின் எரிபொருள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. ராக்கெட்டின் பரிணாமத்தை நாம் பார்த்தால் குறிப்பிட்ட காலத்தில் தொழில்நுட்ப மாறுபாடு அவசியம்.

நாங்கள் PSLV யை ஒரு தேசிய சொத்து என கூறலாம், அதிக செலவில் தொடர்ந்து செயல்படும். அனால் நான் அதை பரிந்துரைக்க மாட்டேன். இதற்கு மாற்றாக எதிர்காலத்தில் செலவு குறைந்த லாஞ்சரை உருவாக்குவதை இந்தியா பார்க்க வேண்டும் என சோம்நாத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் புதிய தலைமுறை ராக்கெட்டை உருவாக்கி வருகிறோம், இது செலவு, மறு பயன்பாடு, உற்பத்தி செயல்முறை மற்றும் விரைவாக உற்பத்தி செய்யக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தற்போது எங்கள் குழுக்கள் அதனை செயல்படுத்தி வருகின்றன. இந்த அடுத்த தலைமுறை ராக்கெட் மீத்தேன் மற்றும் திரவ ஆக்ஸிஜன், மண்ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்ஸிஜன் போன்ற அதிக திறன் கொண்ட திரவ எரிபொருள் கலவைகளால் இயக்கப்படும் என சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.