தேஜஸ் விமானத்தில் இஸ்ரேலின் பைதான் – 5 ஏவுகணை..!

இந்தியாவின் தேஜஸ் விமானத்தில் இஸ்ரேலின் வானிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான பைதான் – 5 சேர்க்கப்பட்டுள்ளதாக
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தில் இஸ்ரேலின் ஐந்தாம் தலைமுறை ஏவுகணையான பைதான் – 5 பொருத்தப்பட்டதாக ஏவுகணையை உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனம் கூறியது.

மேலும் DRDO தகவலின் படி வானிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் டெர்பி ஏவுகணையும் சோதனை செய்யப்பட்டதாக DRDO கூறியுள்ளது. பைதான் – 5 மற்றும் டெர்பி ஏவுகணைகள் இரண்டையும் இஸ்ரேலின் பாதுகாப்பு நிறுவனமான ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபன்ஸ் சிஸ்ட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

பைதான் – 5 ஏவுகணை எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். மேலும் அதன் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஐந்தாம் தலைமுறை ஏவுகணையில் இலக்குகளை தேடும் (Imaging Seeker) தொழிற்நுட்பமும் உள்ளது. இதன் மூலம் இலக்குகளை கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியும். இந்த இரண்டு ஏவுகணைகளும் தேஜஸ் விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *