அடுத்த வாரம் இந்தியா வருகிறார் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர்..

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் அடுத்த வாரம் இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளின் 30 ஆண்டு கால இராஜதந்திர உறவுகளை நினைவு கூறும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சிறப்பு பாதுகாப்பு பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளதாக தி டைம்ஸ் ஆம் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சக அலுவலக தகவலின்படி, அடுத்த மாதம் ஜூன் 1 ஆம் தேதி பென்னி காண்ட்ஸ் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் முதலில் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டது. ஆனால் மார்ச் 22 ஆம் தேதி இஸ்ரேலின் மேற்கு கடற்கரையில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்ததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பென்னி காண்ட்ஸ் அடுத்த மாதம் 1 ஆம் தேதி இந்தியா வர உள்ள நிலையில் அவரது பயண திட்டம் வெளியிடப்படவில்லை. முன்னதாக பென்னி மார்ச் மாதம் வருவதாக இருந்தபோது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனான சந்திப்புக்கு மார்ச் 30 மற்றும் 31 தேதிகள் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் பென்னி வருகையின் ரத்தால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் இந்தியா-இஸ்ரேல் இராஜதந்திர உறவுகளின் 30 வது ஆண்டை குறிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ஏப்ரல் 3 முதல் 5 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவதாக இருந்தது. ஆனால் மார்ச் 28 அன்று பிரதமர் நஃப்தலி பென்னட்டுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை உறுதியானதால் இஸ்ரேல் பிரதமரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

Also Read: வெளியே கசிந்த இராணுவ ரகசியம்.. 4 உயர் இராணுவ அதிகாரிகளை தூக்கிலிட்ட சீனா..

இந்தியா-இஸ்ரேல் இடையிலான இராஜதந்திர உறவு 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வருடத்துடன் 30 வருடங்கள் முடிவடைகின்றன. ஏப்ரல் 25 அன்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலோன் கூறுகையில், இந்தியா-இஸ்ரேல் இடையிலான எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக கூறினார். தற்போது இந்தியா வரஉள்ள பாதுகாப்பு அமைச்சர், இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது, வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு துறைகளில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.

Also Read: மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..

Leave a Reply

Your email address will not be published.