ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தனது விமானப்படையில் இணைக்கும் இஸ்ரேல்..

அமெரிக்காவில் இருந்து மூன்று புதிய “ஆதிர் F35I” ஐந்தாம் தலைமுறை போர் விமானம் நேற்று நேவாடிமில் தறையிறங்கியது. இந்த மூன்று விமானங்களும் விரைவில் இஸ்ரேல் விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது. அவை லயன்ஸ் ஆப் தி சவுத் படையில் சேர்க்கப்பட உள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.

மொத்தமாக 50 விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் போட்டுள்ளன. தற்போது மூன்று விமானங்கள் வந்தடைந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 23 விமானங்கள் இஸ்ரேல் வந்தடையும் என கூறப்படுகிறது.

இந்த 50 விமானங்கள் மட்டுமில்லாமல் மேலும் பல விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எண்ணிக்கை கூறப்படவில்லை. இந்த ஆதிர் F35I அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். ஐந்தாம் தலைமுறை போர் விமானமான இது ரேடாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட சென்சார் அமைப்பு, தன்னியக்க தளவாட தகவல் அமைப்பு (ALIS), தகவல் தொடர்பு மற்றும் பராமரிப்பு மேலாண்மை அமைப்புகளை கொண்டுள்ளது. F35 என்பது கூட்டு ஸ்ட்ரைக் ஃபைட்டர் திட்டத்தின் தயாரிப்பு ஆகும்.

Also Read: இந்திய இராணுவத்திற்கு புதிதாக 118 அர்ஜூன் டேங்குகள்.. அனுமதி வழங்கியது பாதுகாப்பு அமைச்சகம்..

இந்த திட்டத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், நார்வே, கனடா, ஆஸ்திரேலியா, துருக்கி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த விமானத்தை முதல் நாடாக இஸ்ரேல் வாங்கி உள்ளது. புதிய விமானத்தில் ஸ்குவாட்ரான் சின்னம் இணைக்கப்படும் விழாவில் மேஜர் எரான் ஃபாஹிமா மற்றும் அவரது மனைவி லெப்டினன்ட் கர்னல் லியாட் ஃபாஹிமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: அணுசக்தி திறன் கொண்ட அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்ய உள்ள DRDO.. ஆவேசமடைந்த சீனா, பாகிஸ்தான்..

Leave a Reply

Your email address will not be published.