ஹமாஸுக்கு எதிராக கொலையாளி டால்பின்கள் மூலம் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்..

தனது கடற்படை கமாண்டோக்களை சிறப்பு போர் கருவிகளை அணிந்த கொலைகார டால்பின்களை கொண்டு இஸ்ரேல் தாக்கியுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸின் இராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸ், காசா பகுதியை கட்டுபடுத்தும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும்.

இந்த அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் திங்களன்று காசா பகுதியின் கடற்கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் ஹமாஸ் தவளை கமாண்டோக்களை விரட்டுவதற்கு ஒரு கொலையாளி டால்பினை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. அந்த டால்பின்கள் கொல்லும் திறன் கொண்ட கேட்ஜெட் பொருத்தப்பட்டு இருந்ததாக ஹமாஸ் கூறியுள்ளனர்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் இவர்களின் மோதல் கடலுக்கடியிலும் நிலவி வருகிறது. கடந்த மே மாதம் நீருக்கடியில் ஆளில்லா விமானத்தை ஏவ முயன்ற ஹமாஸ் வீரர்களை கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் நார்கோ சப்ஸ் போன்ற தண்ணீரில் அரிதாகவே தெரியும் சுயவிவரத்தை கொண்ட கிளைடர்ஸ் எனப்படும் அரை-மூழ்கி கப்பல்களை ஹமாஸ் உருவாக்கியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது, இருப்பினும் ஹமாஸ் நீருக்கடியில் ஆளில்லா விமானங்களை வைத்திருப்பதை இன்னும் ஒப்புகொள்ளவில்லை.

ஹமாஸ் கூற்றுப்படி, இஸ்ரேல் மீதான நடவடிக்கையின் போது ஹமாஸ் வீரர்களை கொல்லும் திறன்கொண்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஒரு டால்பின் மூலம் துரத்தப்பட்டதாக கூறியுள்ளது. கடந்த மே மாதம் நடந்த மோதலின்போது இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸின் பிராக்மேன் பிரிவின் உறுப்பினர் கொலையாளி டால்பினை கண்டுபிடித்ததாக அபு ஹம்சா கூறியுள்ளார்.

இஸ்ரேல் இராணுவ நோக்கங்களுக்காக ஏற்கனவே மற்ற விலங்குகளை பயன்படுத்தியதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு எகிப்தின் தெற்கு சினாய் ஆளுநரான மொஹமட் அப்தெல் பதில் ஷௌஷா, ஷர்ம் எல்-ஷேக்கில் கொடிய சுறா தாக்குதல்களால் எகிப்திய சுற்றுலாவுக்கு மொசாட் தீங்கு விளைவிக்கும் நடைவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

Also Read: இனப்படுகொலை செய்யும் சீனாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த உய்கூர் முஸ்லிம்கள்..

இதேபோல் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு சவூதி அரேபிய அதிகாரிகள் கழுகு ஒன்றை தடுத்து வைத்தனர். 2013 ஆம் ஆண்டு துருக்கிய அதிகாரிகள் ஒரு இஸ்ரேலிய உளவு பறவையை கைது செய்தனர், இருப்பினும் அதில் எந்த எக்ஸ்-கதிர்கள் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் அதனை விடுவித்தனர்.

Also Read: சீனாவில் இருந்து வெளியேறுவதாக ஜப்பானின் சிப் உற்பத்தி நிறுவனம் அறிவிப்பு..

இஸ்ரேல் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளும் இதுபோன்ற பாலுட்டி பிரிவை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய தளங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஈரான் கூற்றுப்படி, கொளையாளி டால்பின்களின் தலையில் ஹார்பூன்களை கட்டியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.