பாகிஸ்தானில் இலங்கை நபரை கொன்று உடலை எரித்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு..

பாகிஸ்தானில் இலங்கை நபர் ஒருவரை அடித்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் வெள்ளிக்கிழமை அன்று இலங்கையை சேர்ந்த நபரை வெளியே இழுத்து சென்று சித்ரவதை செய்து கொன்ற பின் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் பஞ்சாப் ஐஜி ராவ் சர்தார் அலி கான், குஜ்ரன்வாலா காவல்துறை அதிகாரிகளை உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டார்.

சியோல்கோட் மாவட்ட போலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக் கூறுகையில், உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 40 வயதுடைய பிரியந்த குமார ஆவார். குமார தனியார் தொழிற்சாலையில் ஏற்றுமதி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று, தனது அலுவலக சுவரில் தெஹ்ரிக்-இ-லெப்பை பாகிஸ்தானின் (TLP) குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

தனது அலுவலக சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்ததால் பிரியந்த குமார அதனை கிழித்து குப்பை தொட்டியில் போட்டுள்ளார். இதனை கவனித்த அங்கு பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு பேர் மற்றவர்களிடம் கூற இது காட்டுத்தீ போல் பிற இடங்களுக்கும் பரவியது. குர்ஆன் வசனங்கள் எழுதிய போஸ்ட்டரை கிழித்ததால் TLP அமைப்பை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பிரியந்த குமார வேலையும் அலுவலகத்திற்கு வெளியே குவிந்தனர்.

பின்னர் பிரியந்த குமாரவை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து சித்தரவதை செய்து அடித்து கொன்றுள்ளனர். பின்னர் உடலை தீ வைத்து எரித்துள்ளனர். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், இது ஒரு கொடூரமான தாக்குதல். இலங்கை நபர் எரிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானுக்கு அவகாரமான நாள்.

விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் கூறுகையில், இது மிகவும் சோகமான சம்பவம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.

Also Read: பாகிஸ்தானில் சீனாவுக்கு எதிராக போராட்டம்.. பின்னடைவில் பெல்ட் அண்ட் ரோட் திட்டம்..

TLP எனப்படும் தெஹ்ரிக்-இ-லெப்பை பாகிஸ்தான் அமைப்பு பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். கடந்த சில மாதங்களாக இந்த அமைப்பை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் அமைப்பின் மீது உள்ள தடையை நீக்ககோரியும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாற இருதரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

Also Read: இந்திய தூதரகத்தை புகைப்படம் எடுத்த 3 பாகிஸ்தானியர்கள்.. கைது செய்தது இலங்கை போலிஸ்..

துப்பாக்கிச்சூட்டில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் TLP அமைப்புடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இம்ரான்கான் கையெழுத்திட்டார். சமீபத்தில் அந்த அமைப்பின் மீதான தடையை இம்ரான்கான் நீக்கினார். மேலும் அந்த அமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வி மற்றும் 1,500க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

Also Read: பாகிஸ்தான் இராணுவத்தின் மீது தாலிபான் தாக்குதல். இரண்டு வீரர்கள் பலி..

Leave a Reply

Your email address will not be published.