கார்கிலில் புத்த கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு.. மாபெரும் பேரணி நடத்திய புத்த துறவிகள்..

லடாக்கில் புத்த கோவில் கட்ட அனுமதிகோரி சோஸ்கியோங் பால்கா ரின்போச்சே தலைமையிலான மாபெரும் புத்த துறவி அணிவகுப்பு இன்று லடாக் நோக்கி சென்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 15, 1961 அன்று அப்போதைய ஐம்மு காஷ்மிர் அரசு, புத்த கோவில் மற்றும் சாராய் கட்டுவதற்காக லடாக் பௌத்த சங்கத்திற்கு (LBA) கார்கில் மோன்சாவில் 2 கனல்கள் அளவுள்ள கல்சா நிலத்தை புத்த கோவில் கட்டுவதற்காக அனுமதித்தது. அந்த இடத்தில் மதம் சார்ந்த கட்டுமானங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்னர் ஜூன் 18, 1969 அன்று, அப்போதைய ஜம்மு காஷ்மீர் அரசு. நிலத்தின் பயன்பாட்டை மாற்றியது. அதில் லடாக் பௌத்த சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், குடியிருப்பு அல்லது வணிக கட்டிடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும், மத கடடுமானத்திற்கு அனுமதி இல்லை எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது இருந்தே பௌத்தர்கள் கார்கிலில் புத்த கோவில் கட்டுவதற்கு போராடி வருகின்றனர். ஆனால் இதற்கு உள்ளுர் இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புத்த கோவில் கட்ட அனுமதிக்க கோரி சோஸ்கியோங் பால்கா ரின்போச்சே தலைமையில் மே 31 அன்று லே வில் தொடங்கி ஜூன் 14 அன்று கார்கிலில் முடிக்க திட்டமிட்டு இன்று அனைவரும் கார்கில் நோக்கி பயணத்தை மேற்கொண்டனர்.

முன்னதாக ஜூன் 11 அன்று நடந்த கூட்டத்தில், கார்கில் இமாம் கொமேனி மெமோரியல் டிரஸ்ட் (IKMT) மற்றும் கார்கில் இஸ்லாமியா பள்ளி ஆகியவற்றின் புத்த கோவிலுக்கு எதிரான கருத்துக்கு லாடாக் பௌத்த சங்கம் கண்டனம் தெரிவித்தது. லடாக் பௌத்த சங்கம் தலைவர் ஸ்கர்மா தாதுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்கிலில் ஒரு மடாலயம் கட்டுவதில் இருந்து பௌத்தர்கள் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாங்கள் எந்த பதட்டத்தையும் உருவாக்க விரும்பவில்லை, அனால் சரியான வழிபாட்டு இடத்தை வைத்திருப்பது எங்கள் உரிமை என கூறியுள்ளார். சோஸ்கியோங் பால்கா ரின்போச்சே தலைமையிலான அணிவகுப்பை எதிர்த்து கார்கில் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு கார்கில் ஜனநாயக கூட்டணி கடிதம் எழுதியுள்ளது. இந்த பகுதியில் உள்ள மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் குலைப்பதே இந்த பேரணியின் நோக்கம் என கார்கில் ஜனநாயக கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில் ஷியா முஸ்லிம்கள் அதிகம வசிக்கும் கார்கில் பகுதியில் பௌத்த துறவிகள் நடத்தும் பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் செல்லும் வழியில் பாஜக எம்பியான ஜம்யாங் செரிங் நம்கியால் அவர்களை சந்தித்து அவர்களை திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் லடாக் துணை தலைவர் டோர்ஜே ஆங்சுக் கூறுகையில், ஒவ்வொரு சமூகத்திற்கும் வழிபட உரிமை உண்டு எனவும், கோம்பா கட்டப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போது சோஸ்கியோங் பால்கா ரின்போச்சே தலைமையிலலான பௌத்த குழுவினர் கார்கிலுக்குள் நுழையாமல் வெளியேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.