இஸ்லாம் எங்களின் மாநில மதம் கிடையாது.. பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு: முராத் ஹசைன்

நமது அண்டை நாடான பங்களாதேஷில் துர்கா பூஜை அன்று நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 8க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட கோவில்கள் சேதமடைந்துள்ளன.

இஸ்லாமின் புனித நூலை இந்துக்கள் அவமதித்துவிட்டதாக சமூகவலைதலங்களில் பரவிய போலியான புகைபடங்களால் இந்த கலவரம் தொடங்கியது. இந்த கலவரம் குறித்து இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்தது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இந்த நிலையில் அந்நாட்டின் மாநில அமைச்சர் முராத் ஹசன் கூறுகையில், பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு என கூறியுள்ளார்.

இஸ்லாம் எங்கள் மாநிலத்தின் மதம் கிடையாது, நாங்கள் 1972 அரசியலமைப்பிற்கு திரும்புவோம் என கூறியுள்ளார். 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு நவகாளி கலவரம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் பிரிக்கப்பட்டது. எனினும் பங்களாதேஷ் 1971 வரை கிழக்கு பாகிஸ்தான் என்றே அழைக்கப்பட்டது.

பின்னர் 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இந்தியா போரிட்டு பங்களாதேஷிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் பங்களாதேஷின் தேச தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானால் 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு திரும்புவோம் என மாநில அமைச்சர் முராத் ஹசைன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷை மத அடிப்படைவாதிகளின் புகலிடமாக இருக்க அனுமதிக்கமாட்டோம். 1972 அரசியலமைப்பு சட்டத்திற்கு மீண்டும் திரும்ப பாராளுமற்றத்தில் குரல் கொடுப்பேன். எங்கள் உடலில் சுதந்திர போராட்ட வீரர்களின் இரத்தம் உள்ளது, யார் பேசாவிட்டாலும் நான் பேசுவேன் என ஹசைன் தெரிவித்தார்.

Also Red: இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது..

பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு என்ற அந்த மசோதாவை பிரதமர் ஷேக் ஹசினா தலைமையில் பாராளுமன்றத்தில் இயற்றுவோம் என ஹசைன் கூறினார். அரசியலமைப்பில் பங்களாதேஷின் முதன்மை மதமாக இஸ்லாத்தை இணைத்த முன்னாள் இராணுவ ஆட்சியாளர்கள் ஹூசைன் முகம்மது எர்ஷாத் மற்றும் ஜியாவுர் ரஹ்மான் ஆகியோரை ஹசைன் கடுமையாக சாடினார்.

Also Read: சீனாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட உய்கூர் முஸ்லிம் இன பெண்..

மதத்தின் அடிப்படையில் பிஎன்பி ஜமாத் வன்முறையை தூண்டி விடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பங்களாதேஷ் மதசார்பற்ற நாடு. இங்கு உள்ள மக்கள் அவர்களின் மத நம்பிக்கையை பின்பற்றுவதற்கு முழு உரிமை உண்டு என முராத் ஹசைன் தெரிவித்துள்ளார்.

Also Read: காஷ்மீர் பண்டிட் படுகொலை எதிரொலி.. ஜம்மு காஷ்மீரில் 570 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை..

Leave a Reply

Your email address will not be published.