சீனாவின் வலையில் சிக்கியதா இலங்கை..? 500 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல்..

கொரோனா தொற்றால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு சீனா 500 மில்லியன் டாலர் கடன் வழங்க முன்வந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா 1பில்லியன் டாலர் சீனாவிடம் கடன் கேட்ட நிலையில் இரண்டாவது தவனையாக சீனா 500 மில்லியன் டாலர் கடனை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் பெய்ஜிங்கை தளமாக கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இலங்கைக்கு 180 மில்லியன் டாலர் கடன் வழங்க அனுமதி அளித்துள்ளது.

கடந்த மாதம் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடினார். இலங்கை ஏற்கனவே சீனாவிற்கு 5 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் பாக்கி வைத்துள்ளது.

கொரோனா தொற்று பரவியதில் இருந்தே இலங்கை கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் இலங்கையின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 203 ரூபாயாக சரிந்துள்ளது. மேலும் நாட்டின் அந்நிய செலாவணி இருப்பும் குறைந்குள்ளது.

கொரோனா தொற்றால் வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ரூபாயின் அளவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் தான் இலங்கை சீனாவிடம் கடன் கேட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியும் இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் அளவுக்கு இடமாற்று வசதியை அளித்தது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடனை திருப்பி தருவதற்கு கால அவகாசம் கோரினார். மேலும் 1 பில்லியன் டாலர் அளவுக்கு கடனும் கேட்டுள்ளார். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *