பாஜகவில் இணைகிறாரா கேப்டன் அம்ரீந்தர் சிங்..? அமித்ஷாவுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை..

பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அவர் விரைவில் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

அதற்கு வலுசேர்க்கும் விதமாக இன்று டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை கேப்டன் அம்ரீந்தர் சிங் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது.

இன்னும் 6 மாதத்தில் பஞ்சாப்பில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் முதலமைச்சர் பதவியை அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

மேலும் ராஜினாமாவிற்கு பிறகு சில அறிக்கையை வெளியிட்ட அம்ரீந்தர் சிங், காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்தி விட்டதாக உணர்கிறேன் என தெரிவித்து இருந்தார். தற்போது பஞ்சாப் முதல்வராக சித்துவின் ஆதரவு பெற்ற சரண்சித் சிங் சன்னி நியமிக்கப்பட்டுள்ளர்.

Also Read: இந்தியாவில் சிப் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தைவானுடன் பேச்சுவார்த்தை.. எச்சரிக்கும் சீனா..

இந்த நிலையில் இன்று திடீரென பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினமா செய்துள்ளார். இது அடுத்த புயலை கிளப்பியுள்ளது. தற்போது முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைந்தால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Also Read: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆதரவு..

இருப்பினும் கருத்து கணிப்புப்படி பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என கூறப்படுகிறது. இரண்டாவதாக அகாலி தளம் அதிக எண்ணிக்கையிலான இடத்தை கைப்பற்றும் என தெரிகிறது. மூன்றாவது இடத்திற்கு பாஜக அல்லது காங்கிரஸ் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை பாஜகவில் கேப்டன் அம்ரீந்தர் சிங் இணைந்தால் தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்படலாம். பஞ்சாப்பில் கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது.

Also Read: பாகிஸ்தான் இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது 28 லட்சத்திற்கு பிரியாணி சாப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்கள்..

Leave a Reply

Your email address will not be published.