5G, 6G தொழில்நுட்பத்தில் முதலீடு.. இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை: பிரதமர் மோடி பேச்சு

சிட்னி மாநாட்டில் காணொளி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, 5G மற்றும் 6G தொலைதொடர்பு தொழிற்நுட்பங்களில் உள்நாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தியா முதலீடு செய்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செமி கண்டக்டர்கள் பற்றாக்குறையை போக்க செமி கண்டக்டர்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இன்று தொழிற்நுட்பத்தில் சிறந்த தயாரிப்பு, தரவு, பாதுகாப்பு, தனியுரிமை ஆகியவற்றில் வலுவான கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது.

தனிநபர் உரிமைகளுக்கான வலுவான கட்டமைப்புகளை கொண்ட ஜனநாயக நாடுகளில் இந்தியா ஒப்பிட முடியாத அனுபவத்தை கொண்டுள்ளது. டிஜிட்டல் டொமைனில் இந்தியா இந்தியா மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. புதிய தொலைத்தொடர்பு தொழிற்நுட்பங்களை உருவாக்குவதில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இணைந்துள்ளது.

கிளவுட் பிளாட்பார்ம்கள், கிளவுட் கம்யூட்டிங் மற்றும் குவாண்டம் கம்யூட்டிங்கில் உலக தரத்திலான திறன்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்தியாவின் விண்வெளி திட்டம் அதன் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பின் இன்றியமையாத பகுதியாகும்.

விண்வெளி துறையில் புதுமை மற்றும் முதலீட்டுக்காக தனியார் நிறுவனமும் முதலீடு செய்யும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் முக்கிய மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

இணைய பாதுகாப்பிற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற எங்கள் தொழில்துறையுடன் இணைந்து ஒரு குழுவை அமைத்துள்ளோம். செமி கண்டக்டர்களின் முக்கிய உற்பத்தியாளராக மாறுவதற்கு ஊக்கத்தொகையுடன் கூடிய தொகுப்பை தயார் செய்கிறோம்.

Also Read: கிரிப்டோ கரன்சி தொடர்பாக மத்திய அரசுக்கும் கிரிப்டோ பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம் துறையில் இணைக்கப்பட்ட ஊக்க திட்டங்களால் உலகளாவிய நிறுவனங்களை இந்தியாவில் தளம் அமைக்க ஈர்த்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது.

கிரிப்டோகரன்சி தொடர்பாக அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். மேலும் இளைஞர்களை கெடுக்ககூடியவர்களின் கைகளில் சென்றுவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும். 130 கோடி இந்தியர்களும் தனித்துவமான டிஜிட்டல் அடையாளங்களை கொண்டுள்ளனர். ஆறு லட்சம் கிராமங்களை பிராட்பேண்ட் மூலம் இணைக்கும் திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.

Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..

இந்தியாவின் டிஜிட்டல் தடுப்பூசி தளமான CoWin செயலியை முழு உலகிற்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. 5G மற்றும் 6G தொலைதொடர்பு தொழில்நுட்பத்தில் உள்நாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில் நாங்கள் முதலீடு செய்து வருகிறோம் என பிரதமர் மோடி சிட்னி மாநாட்டில் கூறி உள்ளார்.

Also Read: அக்டோபரில் GST வரி வருவாய் 1.30 லட்சம் கோடியை கடந்து சாதனை.. வளர்ச்சியில் பின்னோக்கி தமிழகம்..

Leave a Reply

Your email address will not be published.