சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உட்கட்சி பூசல்.. ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய முடிவு..?

சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கான காலம் நெருங்கி வரும் நிலையிவ், அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்வதற்கான வேலையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜி ஜின்பிங்கின் எதிர்ப்பு பிரிவினர் இந்த நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் செயல்பாடு பிடிக்காததால் அவருக்கு எதிரானவர்கள் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்யும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (CCP) இரு பிரிவுகள் உள்ளன. ஒன்று சீன கம்யூனிஸ்ட் யூத் லீக் (CCYL) மற்றும் ஷாங்காய் கட்சி.

கட்சி தவறான பாதையில் செல்வதை தடுக்கவும், வளர்ச்சியை முன்னெடுக்கவும் 1990 ஆம் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்த டெங் சியோபிங்கின் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பின்னர் இந்த இரண்டு பிரிவுகளிலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்ததால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் ஜி ஜின்பிங் வந்த பிறகு கட்சியில் நிறைய மாற்றங்களை செய்தார். இது எதிர் தரப்பினருக்கு பிடிக்கவில்லை. மேலும் தன்னை நிரந்தர அதிபராகவும் ஜி ஜின்பிங் அறிவித்து கொண்டார். இதனால் எதிர் தரப்பினர் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது உள்ள அதிபர் ஜி ஜின்பிங் ஷாங்காய் பிரிவை சேர்ந்தவர். இவருக்கு முன் அதிபராக இருந்த ஹு ஜிண்டாவோ சீன கம்யூனிஸ்ட் யூத் லீக் பிரிவை சேர்ந்தவர். இவருக்கு முன் அதிபராக இருந்த ஜியாங் ஜெயின் ஷாங்காய் பிரிவை சேர்ந்தவர். இந்த இரு பிரிவினரும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் தற்போது ஜி ஜின்பிங் நிரந்தர அதிபரானதால் அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. சீனா ஹாங்காங்கில் கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தை விதித்து தன்னுடன் இணைத்து கொண்டது. மேலும் பிரபல தொழில் அதிபர் ஜாக் மா மற்றும் ஜி ஜின்பிங் இடையே மோதல் நிலவி வந்தது.

இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி நிறுவனம் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜாக் மாவிற்கு சொந்தமான செய்தி நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.