சீன நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க எம்.பி.க்களின் சர்வதேச கூட்டணி..

ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உட்பட 10 நாடுகளுக்கும் மேற்பட்ட 35 சட்டமன்ற உறுப்பினர்கள் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டாய தொழில் தொடர்பாக முறைகேடுகளை செய்யும் நிறுவனங்களிம் தடுப்பு பட்டியலை உருவாக்குமாறு தங்கள் அரசாங்கங்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கூர் மக்களிடம் கட்டாய உழைப்பு வாங்கப்படுவதாகவும், மனித உரிமை மீறல் நடப்பதாகவும் கூறி ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது.

மேலும் ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனத்திற்கும் (XPCC) அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த நிலையில் XPCC நிறுவனத்தின் துணை நிறுவனத்தில் HSBC வங்கி பங்குகளை வைத்திருப்பதாக அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வங்கி நிறுவனங்களில் இருந்து முதலீட்டாளர்களை தடுக்குமாறும், முறைகேடுகளில் ஈடுபட்ட சீன நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் வைக்குமாறும் இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 நாடுகளுக்கும் மேற்பட்ட 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த 35 சட்டமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்ட கடிதம் IPACஆல் ஒருங்கிணைக்கப்பட்டு கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றில் கையொப்பமிட்டவர்களில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சீன பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரெய்ன்ஹார்ட் புட்டிகோஃபர், இங்கிலாந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் சர் இயன் டங்கன் ஸ்மித் ஆகியோர் கையெழுத்திட்டடுள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலிய தொழிலாளர் செனட்டர் கிம்பர்லி கிச்சிங் மற்றும் இந்திய பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி சுஜீத் குமார், ஐரோப்பிய ஆணையர் மைரேட் மெக்கின்னஸ் மற்றும் இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக் ஆகியோர் அந்தந்த நிதி அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஜின்ஜியாங் மாகாணத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்கூர் முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டு கட்டாய உழைப்பு, சித்தரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.