ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 பேரை கைது செய்த புலனாய்வு அமைப்பு..

கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தனின் எல்லை மாவட்டங்களை சேர்ந்த 3 பேரை இந்திய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

உளவு அதிகாரிகளின் தகவலின்படி, ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்களான ஶ்ரீ கங்காநகர், ஹனுமன்கர் மற்றும சுரு ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆப்ரேஷன் ஹிஃபாஜத் என்ற சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவற்றில் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட மூவரும் ஹனுமன்கரை சேர்ந்த அப்துல் சத்தார், ஶ்ரீகங்காநகரை சேர்ந்த நிதின் யாதவ் மற்றும் சுருவை சேர்ந்த ராம் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் இராணுவம் தொடர்பான மற்றும் இராணுவ நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளனர்.

அதற்கு பதிலாக அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான அப்துல் சத்தார், கடந்த 2010 ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து சென்று வந்ததாகவும், ராணுவம் மற்றும் முக்கிய இடங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வழங்கி வந்ததாகவும் அப்துல் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மற்றொரு நபரான நிதின் யாதவ், ஒரு பாகிஸ்தான் பெண் ஏஜென்டால் ஹனி ட்ராப் செய்யப்பட்டுள்ளார். அவர் சூரத்கர் மற்றும் மகாஜன் பீரிங் ரேஞ்சரில் இராணுவத்தின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் ஏஜென்டிடம் பகிர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து மூவர் மீதும் 1923 அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் மற்றும் மின்னனு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள ஒருவரை மாநில காவல்துறை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் ஜெய்சல்மரில் மொபைல் கடை நடத்தி நிபாப் கான் என அடையாளம் காணப்பட்டார்.

நிபாப் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றிருந்ததாகவும், அங்கு அவருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பு 15 நாட்கள் பயிற்சி வழங்கியதாகவும், 10,000 ரூபாய் பணம் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் இந்தியா திரும்பிய உடன் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.