காங்கோவில் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள். 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு..

காங்கோ ஜனநாயக குடியரசில் செவ்வாய் அன்று கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பூமா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 ஐ.நா படை வீரர்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 8 வீரர்களில் பாகிஸ்தானை சேர்ந்த 6 வீரர்கள், ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் மற்றும் செர்பியாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 பேரின் உடல்கள் கோமாவுக்கு (Goma) கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

இதனை பாகிஸ்தான் இராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. 2011 முதல் பாகிஸ்தான் காங்கோவில் உள்ள ஐ.நா அமைதி படைக்கு பாகிஸ்தான் வீரர்களை அனுப்பியுள்ளது. அதிர்ச்சி மற்றும் துயரத்தை வெளிபடுத்திய இம்ரான்கான், நாட்டின் ஆயுத படைகளின் உலகளாவிய அமைதி முயற்சிக்கு அஞ்சலி செலுத்துவதாக அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் காங்கோ இராணுவத்திற்கும் M23 எனப்படும் கிளர்ச்சி குழுவிற்கும் இடையே கிவு மாகாணத்தில் மோதல் நடைபெற்ற இடத்தில் பூமா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. பூமா ஹெலிகாப்டரை M23 கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக காங்கோ இராணுவம் கூறியுள்ளது.

Also Read: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை கைது செய்த உ.பி காவல்துறை..!

ஆனால் இதனை M23 செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். மேலும் ஹெலிகாப்டர் விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருவதாக ஐ.நா கூறியுள்ளது. M23 கிளர்ச்சி குழு 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சிக்கு பிறகு காங்கோவில் இருந்து வெளியேற்றப்பட்டது.

பின்னர் அண்டை நாடான உகாண்டா மற்றும் ருவாண்டாவில் இருந்து செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த கிளர்ச்சி குழு மீண்டும் தாக்குதலை அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு இரண்டு இராணுவ நிலைகளை M23 தாக்கிய நிலையில் கடுமையான சண்டை தொடங்கியது.

Also Read: MRSAM ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO..

உகாண்டாவின் இராணுவமும் செவ்வாய் அன்று காங்கோ எல்லை அருகே 14 M23 போராளிககை கொன்றதாக கூறியுள்ளது. சமீப நாட்களாக M23 போராளிகளை ஒடுக்க தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. M23 செய்தி தொடர்பாளர் வில்லி நிகோமா செவ்வாய் அன்று கூறுகையில், குழு தன்னை தற்காத்து கொள்ள மட்டுமே போராடுவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.