காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தது இந்தோனேசிய கடற்படை..?

காணாமல் போன இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து சில பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 53 பேருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானது. இந்தோனேசிய கடற்படை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்கவில்லை.

மேலும் நீர்மூழ்கி கப்பலில் சனிக்கிழமை காலை வரைக்கும் மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் கூறினார். இந்த நிலையில் இன்றுடன் ஆக்சிஜன் முடிவதால் வீரர்கள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

காணாமல் போன கப்பலில் இருந்து இந்தோனேசிய கடற்படை சில பொருட்களை மீட்டுள்ளது. அவற்றில் பெரீஸ்கோப், கிரீஸ் பாட்டில் மற்றும் டார்பிடோ ஸ்ரைட்டனர் உட்பட பல பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இவற்றுடன் தற்போது அமெரிக்காவின் பி-8 போசிடன் உளவு விமானம், ஆஸ்திரேலியாவின் சோனார் பொருத்தப்பட்ட விமானம் மற்றும் 24 இந்தோனேசிய விமானங்களும் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேட உள்ளன.

இந்த நீர்மூழ்கி கப்பல் பாலி அருகே புதன்கிழமை காணாமல் போன நிலையில் தற்போது இந்த சில பொருட்களை கண்டுபிடித்துள்ளதால் விரைவில் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்து விடுவோம் என இந்தோனேசிய கடற்படையினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *