நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தோனேசிய அரசு.. நெருக்கடியில் சீனா..

இந்தோனேசியா உள்நாட்டு எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யுப் பொருட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய தவறிய சுரங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய உள்ளதாகவும் ஜனாதிபதி ஜோகோ விடோடோ தங்கள் அன்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்தோனேசிய மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் 73 சதவீதம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடைவிதிக்கப்பட்டதால் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இதன் மூலம் எரிபொருள் விலை சீனாவில் அதிகரித்து மின்விநியோகம் தடைப்படும் என கூறப்படுகிறது.

இந்தோனேசிய எரிசக்தி அமைச்சகம் அதன் இணையதளத்தில் எரிபொருள் ஏற்றுமதியை ஒரு கால மாதம் நிறுத்துவதாக ஜனவரி 1 அன்று அறிவித்தது. இருப்பினும் உற்பத்தியாளர்கள் அதிக விலை உள்ள வெளிநாட்டு சந்தைகளை விரும்புவதால் இதை அரசாங்கம் இன்னும் விவாதத்திலேயே வைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் மற்றும் பயன்படுத்துபவராக சீனா உள்ளது. கொரோனா வைரஸ் உருவானதில் இருந்தே ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால், சீனா ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதித்தது. இதனால் சீனாவிம் முக்கிய நிலக்கரி ஏற்றுமதியாளராக இந்தோனேசியா உள்ளது.

இந்தோனேசியாவின் உள்நாட்டு சந்தை கடமை (DMO) கொள்கைகளின் கீழ், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தை மாநில பயன்பாட்டுக்காக பெருசாஹான் லிஸ்ட்ரிக் நெகாரா (PLN)வுக்கு 70 டாலர் மதிப்பில் வழங்க வேண்டும். இதனை எக்காரணத்திற்காகவும் மீறக்கூடாது என ஜனாதபதி ஜோகோவி தெரிவித்துள்ளார்.

Also Read: சீனாவின் ஜின்ஜியாங்கில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை.. கையெழுத்திட்டார் ஜோ பிடன்..

இந்தோனேசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்திராவதி கூறும்போது, இந்தோனேசியாவில் மின்தட்டுப்பாடு நிலவும் போது எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதித்தால் அது இந்தோனேசியாவில் நெருக்கடியை ஏற்படுத்தும். மின்வெட்டை தவிர்ப்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என தெரிவித்துள்ளார்.

Also Read: ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் தாலிபானுக்கும் இடையே மோதல்.. எச்சரித்த தாலிபான்கள்..

2021 ஆம் ஆண்டில் இந்தோனேசியா 15 சதவீத நிலக்கரியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது. தற்போது ஏற்றுமதிக்கு தடைவிதித்து இருப்பதால் இந்தியா வேற ஏற்றுமதியாளர்களிடம் இருந்து இறக்குமதி செய்யும் என கூறப்படுகிறது. இதனால் இதனால் இந்தோனேசியா மறுபரீசிலனை செய்யகூடிய நிலையில் உள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நிலக்கரி உற்பத்தியில் ஐந்தில் நான்கு பங்கு வகிக்கும் கோல் இந்தியாவின் பங்கு திங்களன்று 6.33 சதவீதம் அதிகரித்தது.

Also Read: சவுதி தூதரை அவமதித்த பாகிஸ்தான் அமைச்சர்.. இம்ரான்கானுக்கு குவியும் கண்டனம்..

Leave a Reply

Your email address will not be published.