அமெரிக்கா, சீனா, ஐரோப்பாவை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்: IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாய் அன்று மார்ச் 31 வரையிலான உலக பொருளாதார வளர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் உலகப்பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டு 4.4 சதவீதம் வளரும் என்றும், 2023 ஆம் ஆண்டு 3.8 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக கண்காணிப்பு அமைப்பு அறிக்கையின்படி, இந்தியாவின் வளர்ச்சி 2021-22 ஆம் நிதியாண்டில் 9 சதவீதமாக இருக்கும் எனவும், 2022-23 ஆம் நிதியாண்டில் எவ்வித மாற்றமும் இன்றி அதே 9 சதவீத வளர்ச்சியுடன் சீராக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் மற்ற நிதி கண்காணிப்பு அமைப்புகளான S&P 9.5 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும், மூடிஸ் 9.3 சதவீதம் என்றும், உலக வங்கி 8.3 சதவீதம் என்றும், பிட்ச் 8.4 சதவீதம் என்றும், இந்திய ரிசர்வ் வங்கி 9.5 சதவீதம் என்றும், மத்திய புள்ளியியல் அலுவலகம் 9.2 சதவீதம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என கணித்துள்ளன.

இதுதவிர வளர்ந்த நாடுகளான அமெரிக்கா 2021-22 ஆம் நிதியாண்டில் 4.0 சதவீதம் மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டில் 2.6 சதவீதம் என குறைவான வளர்ச்சியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி 2021-22ல் 3.8 சதவீதம் மற்றும் 2022-23ல் 2.5 சதவீத வளர்ச்சியுடனும், பிரான்ஸ் 2021-22ல் 3.5 சதவீதம் மற்றும் 2022-23ல் 1.8 சதவீத வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி 2021-22ல் 3.8 சதவீதம் மற்றும் 2022-23ல் 2.2 சதவீத வளர்ச்சியுடனும், ஸ்பெயின் 2021-22ல் 5.8 சதவீதம் மற்றும் 2022-23ல் 3.8 சதவீத வளர்ச்சியுடனும், ஜப்பான் 2021-22ல் 3.3 சதவீதம் மற்றும் 2022-23ல் 1.8 சதவீத வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து 2021-22ல் 4.7 சதவீதம் மற்றும் 2022-23ல் 2.3 சதவீத வளர்ச்சியுடனும், கனடா 2021-22ல் 4.1 சதவீதம் மற்றும் 2022-23ல் 2.8 சதவீத வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகளான சீனா 2021-22ல் 4.8 சதவீதம் மற்றும் 2022-23ல் 5.2 சதவீத வளர்ச்சி அடையும் என IMF கணித்துள்ளது.

இந்தியா 2021-22ல் 9.0 சதவீதம் மற்றும் 2022-23ல் 9.0 சதவீத வளர்ச்சியுடனும், ரஷ்யா 2021-22ல் 2.8 சதவீதம் மற்றும் 2022-23ல் 2.1 சதவீத வளர்ச்சியுடனும், பிரேசில் 2021-22ல் 0.3 சதவீதம் மற்றும் 2022-23ல் 1.6 சதவீத வளர்ச்சியுடனும், மெக்சிகோ 2021-22ல் 2.8 சதவீதம் மற்றும் 2022-23ல் 2.7 சதவீத வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வளர்ச்சி 2021-22ல் 4.4 சதவீதம் மற்றும் 2022-23ல் 3.8 சதவீதம் இருக்கும் என IMF கணித்துள்ளது. இதில் இந்தியாவும் ஜப்பான் மட்டுமே கடந்த ஆண்டை விட அதிக வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.