இந்தியாவின் வளர்ச்சி நிலையானது.. இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ்..

பொருளாதார மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை எதிர்மறையில் இருந்து நிலையானது என மாற்றியுள்ளது. இது இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்வதை காட்டுகிறது. இருப்பினும் இந்தியாவின் மதிப்பீடு Baa3 ஆக உள்ளது

மூடிஸ் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை Baa2 இருந்து Baa3 ஆக குறைத்தது. மேலும் கொரோனா தொற்றால் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பை எதிர்மறையாக இருப்பதாக மூடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கணித்து இருந்தது. தற்போது பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புகளுக்கு இடையேயான அபாயங்கள் குறைந்து வருவதால் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பை எதிர்மறையில் இருந்து நிலையானதாக மாற்றி உள்ளது.

2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்தில் இருந்து 6.2 சதவீதமாக குறைத்தது. 2020 ஆம் ஆண்டு 6.7 என்று மதிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாகவும், 2021 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதம் 9.6 ஆக மதிப்பிட்டுள்ளது.

Also Read: இந்தியாவின் ஏற்றுமதி முதல்முறையாக 100 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்து சாதனை..

மேலும் 2022 மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் என மூடிஸ் கணித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியாவின் ஜிடிபி மேல்நோக்கி செல்வதால் நிலையானது என மூடிஸ் மாற்றியுள்ளது. பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்புகளுக்கு இடையேயான எதிர்மறையான அபாயங்கள் குறைந்து வருவதாக மூடிஸ் கூறியுள்ளது.

Also Read: உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

வரி மற்றும் வரி அல்லாத வருவாய் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். கொரோனா தொற்று குறைந்து நிறுவனங்கள் செயல்பட தொடங்கியதால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. கார்ப்ரேட் வரி குறைப்பு, புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி குறைப்பு ஆகியவை மூலமும் இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

Also Read: சீனாவை விட்டு வெளியேறும் பெரும் நிறுவனங்கள்.. இந்தியாவில் கால்பதிக்கும் ஆப்பிள்..

Leave a Reply

Your email address will not be published.