அந்நிய செலாவணி கையிருப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தை பிடித்த இந்தியா..

அந்நிய செலாவணி கையிருப்பில் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்தை தொடர்ந்து இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ரஷ்யாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் நான்காம் இடத்தில் இருந்த ரஷ்யா ஐந்தாவது இடத்திற்கு சென்றுவிட்டது. ஐந்தாம் இடத்தில் இருந்த இந்தியா நான்காவது இடத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 580 பில்லியன் டாலராக உள்ளது. இது கிட்டத்தட்ட ஒன்றரை வருட இறக்குமதிக்கு சமமானது.

கொரோனா நெருக்கடி நேரத்திலும் இந்தியாவில் அதிகரித்து வரும் அந்நிய நேரடி முதலீடு மற்றும் பங்குச்சந்தை உயர்வு போன்றவை காரணமாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் கையிருப்பு அதிகரித்து வருவதாக இந்தியாவின் தலைமை பொருளாதார நிபுணர் கௌசிக் தாஸ் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மோசமான ரூபாய் வீழ்ச்சியால் அமெரிக்காவின் கண்காணிப்புக்கு கீழ் ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மற்றும் இந்தியாவின் அந்நிய செலாவணி கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இரு நாட்டு பொருளாதாரமும் சரிவை கண்டன. இருப்பினும் ரஷ்யாவை விட இந்தியா டாலர்களை சேமித்து வந்துள்ளதால் ரஷ்யாவை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.

கொரோனா தொற்று காலத்திலும் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக உலக வங்கி, IMF மற்றும் மூடிஸ் போன்றவை கணித்துள்ளன. அதன்படி இந்தியாவின் வளர்ச்சி இந்த நிதி ஆண்டில் இரட்டை இலக்கத்தில் அதாவது 12.5 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *