இந்தியாவின் முதல் ஆளில்லா வான்வழி வாகனம் SWiFT வெற்றிகரமாக சோதனை..

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனை தளத்தில் இருந்து முதல் ஆளில்லா வான்வழி வாகனத்தை (UAV)சோதனை செய்துள்ளது. இது SWiFT ன் முதல் விமானம் ஆகும்.

இந்த ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) ஆட்டோனாமஸ் ஃபிளையிங் விங் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் எனவும் அழைக்கப்படுகிறது. முழு தன்னாட்சி முறையில் இயங்கும் இந்த விமானம் புறப்படுதல், வழிசெலுத்தல் மற்றும் மென்மையான டச் டவுன் ஆகியவற்றை துல்லியமாக வெளிப்படுத்தியது.

இந்த விமானம் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்குவதில் பெரும் வெற்றியாக, தன்னாட்சி பறக்கும் விங் தொழில்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டரின் முதல் விமானம் இன்று கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த ஆளில்லா வான்வழி வாகனம் DRDO வின் முதன்மையான ஆராய்ச்சி ஆய்வகமான பெங்களுரில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் எஸ்டாபிளிஷ்மென்ட் மூலம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் ஏர்ஃப்ரேம், அண்டர்கேரேஜ் மற்றும் முழு விமான கட்டுப்பாடு மற்றும் ஏவியோனிக்ஸ் அமைப்புகள் முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானத்தின் வெற்றியானது, எதிர்கால ஆளில்லா விமானங்களை உருவாக்குவதற்கான முக்கியமான தொழில்நுட்பங்களை நிரூபிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. மேலும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தன்னிறைவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முதல் படியாகும்.

ஆளில்லா வான்வழி வாகனத்தின் வெற்றியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் சோதனை தளத்தில் இருந்து தன்னாட்சி பறக்கும் விங் தொழில்நுட்ப டெமான்ஸ்ட்ரேட்டரின் முதல் விமானத்தின் வெற்றிகரமான சோதனைக்கான DRDO க்கு வாழ்த்துக்கள்.

இது தன்னாட்சி விமானங்களுக்கான ஒரு பெரிய சாதனையாகும். இது முக்கியமான இராணுவ அமைப்புகளின் அடிப்படையில் ஆத்மநிர்பார் பாரதத்திற்கு வழி வகுக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் DRDO தலைவர் சதீஷ் ரெட்டியும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலாளரும், அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.