கர்நாடகாவில் அமைகிறது இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை..!

இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தயாரிக்கும் ஆலையை சர்வதேச செமிகண்டக்டர் கூட்டமைப்பு (ISMC) கர்நாடகாவில் அமைக்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த 6 முதல் 8 மாதங்களில் செமிகண்டக்டர் உற்பத்தி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில். ISMC இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை கர்நாடகாவில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ISMC மற்றும் கர்நாடகா அரசு இடையே கையெழுத்தானது.

செமிகண்டக்டர் ஆலையை அமைக்க 3 பில்லியன் டாலர் (22,900 கோடி) முதலீடு செய்ய உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ISMC என்பது அபுதாபியை தளமாக கொண்ட நெக்ஸ்ட் ஆர்பிட் வென்ச்சர்ஸ் மற்றும் இஸ்ரேலின் டவர் செமிகண்டக்டர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

Also Read: 1.8 லட்சம் கோடிக்கு மருந்து ஏற்றுமதி செய்து சாதனை படைத்த இந்தியா..?

கர்நாடகாவில் அமைய உள்ள இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை 1,500 க்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகளையும், 10,000 க்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ISMC மற்றும் வேதாந்தா லிமிடெட் ஆகியவை பிரதமர் நரேந்திர மோடியின் 10 பில்லியன் டாலர் ஊக்கத்தொதை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் ஆலையை அமைக்க இடத்தை தேர்வு செய்வதற்காக குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வேதாந்தா நிறுவனம் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே அலகுகளை அமைப்பதற்காக 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

Also Read: அடுத்த ஆண்டு இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யப்படும் என அறிவிப்பு..?

நாட்டில் செமிகண்டக்டர் துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு டிசம்பர் 15, 2021 அன்று 76,000 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது. செமிகண்டக்டர் உற்பத்தியின் மையமாக இந்தியாவை மாற்ற இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது செமிகான் 2022 மாநாடு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.