நர்மதா ஆற்றின் குறுக்கே 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8 வழிப்பாலம்..

உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலையான மும்பை – டெல்லி நெடுஞ்சாலையின் பணி அடுத்த வருடத்திற்குள் நிறைவடையும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார நகரமான மும்பையில் இருந்து தலைநகர் டெல்லிக்கு 1,380 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது இருக்கு சாலையின் மூலம் மும்பையில் இருந்து தலைநகர் டெல்லியை அடைய 48 மணி நேரம் ஆகிறது. இதனால் நேரம் வீணாகிறது, மேலும் செலவும் அதிகரிக்கிறது. இதனால் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய அதிவேக நெடுஞ்சாலை மூலம் மும்பையில் இருந்து டெல்லிக்கு வெறும் 18-20 மணி நேரத்திற்குள் செல்லலாம் என கூறப்படுகிறது.

மும்பையில் இருந்து செல்லும் இந்த அதிவேக நெடுஞ்சாலை டெல்லியின் நாரிமன் பாயிண்ட் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல இந்த தேசிய நெடுஞ்சாலை விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு பெரிதும் உதவும். இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 1,380 கிலோ மீட்டர். இதற்கான மொத்த செலவு 98,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மும்பை – டெல்லி அதிவேக நெடுஞ்சாலையுடன் நேரடியாக டெல்லி – நொய்டா நெடுஞ்சாலை, குண்ட்லி – பல்வால் நெடுஞ்சாலை, அகமதாபாத் – வதோதரா நெடுஞ்சாலை, மும்பை – நாக்பூர், மும்பை – புனே தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதன்மூலம் மாகாராஷ்ட்ரா, குஜராத், அரியானா, டெல்லி மாநிலங்கள் நேரடியாக இணைக்கப்படுகின்றன.

Also Read: உலகிலேயே அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்த இந்தியா..

1,380 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசிய நெடுஞ்சாலையில் 93 இடங்களில் ATM, பெட்ரோல் நிலையங்கள், சார்ஜிங் நிலையங்கள், உணவகங்கள், சில்லறை கடைகள் போன்றவை உள்ளன. மேலும் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்திலும் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அதிநவீன அவசர சிகிச்சை பிரிவும் உள்ளன.

இந்த அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறமும் 2 மில்லியன் மரங்கள் நடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணிர் பாய்ச்சப்படுகின்றன. மேலும் இந்த வழித்தடத்தில் உள்ள நர்மதா பாலம் 32 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் எட்டுவழிச்சாலை பாலம் ஆகும். இதன் நீளம் 2 கிலோ மீட்டர். இவை இரும்பு கேபிள்களால் இணைக்கப்பட்டுள்ளன.

Also Read: சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஓலா.. முதல் நாளிலேயே அதிக வரவேற்பு.. பெண்களுக்கு முன்னுரிமை..

Leave a Reply

Your email address will not be published.