இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA சோதனை விமானத்திற்கு அடுத்த வருடம் அனுமதி..?
இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA சோதனை விமானம் அடுத்த வருடம் சோதனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. AMCA சோதனை விமானங்களை தயாரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் இடையே முடிவடைந்துள்ளன.
இதனையடுத்து அடுத்த ஆண்டு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவிற்கு (CSS) இது தொடர்பான கோப்புகள் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் AMCA முதல் போர் விமானம் 2025 ஆம் ஆண்டும், 2030 முதல் தயாரிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மூன்று நாடுகளிடம் மட்டுமே உள்ளது.
AMCA போர் விமானத்தால் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைய உள்ளது. அமெரிக்காவின் F-35 மற்றும் F-22 ரேப்டர், ரஷ்யாவின் Su-57 Felon மற்றும் சீனாவின் J-20 ஆகிய நாடுகள் மட்டுமே ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை வைத்துள்ளன. இவற்றில் சீனாவின் J-20 விமானம் 4.5 தலைமுறையை சேர்ந்த விமானம் என கூறப்படுகிறது. ஆனால் சீனா ஐந்தாம் தலைமுறை விமானம் என கூறுகிறது.
ரஷ்யாவின் Su-57 Felon இன்னும் இறுதி கட்ட சோதனையை முடிக்கவிலை. AMCA விமானம் இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு உருவாக்கப்பட உள்ளது. இதனை ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி, HAL மற்றும் DRDO வடிவமைத்துள்ளன. இந்த விமானத்தை இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாரிக்க உள்ளது. இதற்கு 15,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: ரஷ்ய அதிபர் புதின் வருகையின் போது S-500 மற்றும் S-550 ஏவுகணை அமைப்பு கையெழுத்தாக வாய்ப்பு..?
AMCA ஒற்றை இருக்கை கொண்ட இரட்டை எஞ்சின் போர் விமானமாகும். திருட்டுத்தனமான சூப்பர்சோனிக் மல்டி ரோல் போர் விமானம் ஆகும். வான் தாக்குதல், தரை தாக்குதல், SEAD, எலக்ட்ரானிக் வார்ஃபேர் உட்பட பல தாக்குதல்களை நடத்த முடியும்.
அதேபோல் தேஜஸ் Mk-2 போர் விமானத்தின் முதல் சோதனை 2023 ஆம் ஆண்டு தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. 2029 ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்படும். AMCA இரண்டு வகையாக தயாரிக்கப்படுகிறது. ஐந்தாம் தலைமுறையை சேர்ந்த முதலாவது AMCA Mk-1 2030 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும். ஆறாம் தலைமுறையை சேர்ந்த இரண்டாவது AMCA Mk-2 இதன் தயாரிப்பு 2035ல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
Also Read: திபெத் எல்லை அருகே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்துவரும் சீனா.. சாட்டிலைட் புகைப்படம் வெளியானது