இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 90 சதவீதத்தை தன்வசம் வைத்திருக்கும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவே ஆதிக்கம் செலுத்தி வருவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது
ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 63 லட்சம் சீன ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் 2019 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 46 லட்சம் சீன ஸ்மார்ட் போன்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்த நிலையில் இந்த வருடம் அதிகமாகி உள்ளது.
போன வருடத்தோடு ஒப்பிடும் போது, இந்த ஆண்டு அக்டோபரில் மட்டும் 17 லட்சம் சீன ஸ்மார்ட்போன் அதிகமாக விற்றுள்ளது.
சௌமி, விவோ, ஒப்போ ரியல் மீ இந்த நான்கு நிறுவனங்கள் தான் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நான்கு நிறுவனங்களும் இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் 88 – 94 சதவீத சந்தையை தன் கைவசம் வைத்துள்ளன.
சீன பொருட்களை வாங்குவதற்கு எதிராக இந்தியாவில் அலை வீசினாலும், சீன தயாரிப்புக்கு இணையாக இந்திய செல்போன்கள் இல்லை என்பதே இதற்கு காரணம். இதனால் தான் இந்தியாவில் சீன ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் செலுத்துவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.