மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான இரயில் தூண் பாலத்தை கட்டமைத்து வரும் இந்தியன் ரயில்வே..

உலகிலேயே மிக உயரமான தூண் பாலம் மணிப்பூரில் இந்திய இரயில்வேயால் கட்டப்பட்டு வருகிறது. இந்த தூண் கட்டிமுடிக்கப்பட்ட பின் உலகிலேயே மிக உயரமான தூண் என்ற சாதனையை படைக்கும்.

தற்போது ஐரோப்பாவின் மாண்டினீக்ரோவில் உள்ள மாலா-ரிஜேகா வைடக்டின் என்ற 139 மீட்டர் கொண்ட பாலத்தூண் தான் உலகிலேயே மிக உயரமானது. தற்போது மணிப்பூரில் கட்டப்பட்டு வரும் பாலத்தூணின் உயரம் 141 மீட்டர் ஆகும்.

இந்த பாலத்தூண் கட்டப்படும் ஜிரிபாம்-இம்பால் திட்டம் 111 கிலோ மீட்டர் கொண்ட இரயில்வே பாதையாகும். இது மணிப்பூர் தலைநகரை நாட்டின் மற்ற பகுதியுடன் இணைக்கும். மணிப்பூரின் ஜிரிபாம்-இம்பால் இடையேயான தூரம் 220 கிலோ மீட்டர் ஆகும்.

இதனை சாலை வழியாக செல்லும் போது 10-12 மணி நேரம் ஆகிறது. இதில் தற்போது 111 கிலோமீட்டர் தூரத்திற்கு இரயில்வே பாதை அமைக்கப்படுகிறது. இந்த 111 கிலோ மீட்டரை 2-2.5 மணி நேரத்தில் கடந்து விடலாம். இந்த பாலம் தற்போது நோனி பள்ளத்தாக்கில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானத்திற்கு பிறகு இது உலகின் மிகப்பெரிய தூண் பாலமாக இருக்கும்.

இந்த கட்டுமானப்பணி 2023 டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் என இந்த திட்டத்தின் தலைமை பொறியாளர் சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். முதலாவது கட்டமாக 12 கீலோமீட்டர் நீளம் கொண்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது கட்ட பணிகள் கிட்டதட்ட 98 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த வருடம் பிப்ரவரியுடன் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடையும்.

Also Read: பூர்வாஞ்சல் ஆறுவழிச்சாலையை நாட்டு அர்பணித்தார் பிரதமர் மோடி.. போர் விமானங்கள் தரை இறங்கி சாகசம்.

கோங்சோங்கில் இருந்து துபுல் வரையிலான மூன்றாம் கட்ட பணிகள் அடுத்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். துபுல் முதல் இம்பால் வரையிலான கடைசி கட்டப்பணிகள் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும் என சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார். இந்த 111 கிலோமீட்டர் ரயில்வே பாலத்தின் செலவு 374 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த 111 கிலோமீட்டர் தூரத்தில் 61 சுரங்கபாதைகள் வருகின்றன. இங்கு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மிகப்பெரிய அளவில் கனமழை பெய்யும், மழையினால் நிலச்சரிவு ஏற்படும். இதனால் இந்த பகுதியில் வேலை செய்வது கடினம். மேலும் இந்த பகுதியில் கிளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளும் உண்டு. அவர்களாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சந்தீப் சர்மா கூறியுள்ளார்.

Also Read: உலக நாடுகளை ஒன்றிணைக்கும் பிரதமர் மோடியின் “ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே கட்டம்” என்ற மெகா திட்டம்..

Also Read: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் 1.25 லட்சம் கோடிக்கு தீபாவளி விற்பனை.. சீனாவுக்கு 50,000 கோடிக்கு நஷ்டம்..?

Leave a Reply

Your email address will not be published.