INS விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்காக 26 போர் விமானங்களை வாங்க உள்ள இந்திய கடற்படை..?

இந்திய கடற்படையின் பரிந்துரையின் பேரில் INS விக்ராந்த் விமானந்தாங்கி போர்கப்பலுக்கு 26 போர் விமானங்களை அரசாங்கம்-அரசாங்கம் (G2G) ஒப்பந்தத்தின் கீழ் விரைவில் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சேவையில் உள்ள ஒரே விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்கிரமாதித்யாவில் இருந்து இயக்குவதற்காக ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய MIG-29K போர்விமானத்தின் செயல் திறன் திருப்தியாக இல்லாததாலும், மேலும் ஒரு விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்ராந்த் விரைவில் சேவையில் இணைய உள்ளதால் இதற்காக போர் விமானங்களை வாங்க சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்தின் ரபேல் மற்றும் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் F-18 போட்டியில் உள்ளன. இந்த இரண்டு போர் விமானங்களும் இந்தியாவின் விமானந்தாங்கி கப்பல் போல் இல்லாமல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவால் அணுசக்கிதியில் இயங்கும் விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இவை ஸ்கை-ஜம்ப் தளத்தை பயன்படுத்தி விமான தளங்களில் இருந்து புறப்பட உதவுகின்றன.

மேலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானந்தாங்கிகள் போர் விமானங்களை இயக்க Catapult-assisted முறையை பயன்படுத்தி விமானங்களை டேக் ஆஃப் செய்து வருகின்றன. ஒப்பந்தத்திற்கு தகுதி பெற இந்த இரண்டு போர் விமானங்களும் ஸ்கை-ஜம்ப் தளத்தில் இருந்து புறப்படும் திறனை நிருபிக்க வேண்டும். ரபேல் போர் விமானம் ஏற்கனவே இந்த ஆண்டு ஜனவரியில் INS ஹன்சாவில் உள்ள கரை அடிப்படையிலான ஸ்கை-ஜம்ப் சோதனை நடத்தப்பட்டது.

அமெரிக்காவின் F-18 சூப்பர் ஹார்னெட்டின் சோதனைகள் ஜூன் 15 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 போர் விமானங்களும் ஏறக்குறைய ஒரே காலத்தை சேர்ந்தவை. இரண்டு உற்பத்தியாளர்களும் இந்தியாவில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மாற்றியமைக்கும் வசதிகளை கொண்டுள்ளன.

Also Read: இந்திய இராணுவத்திற்கு 100 ஹோவிட்சர்களை வழங்க உள்ள பாரத் ஃபோர்ஜ்..?

இரண்டு விமானங்களும் கோவாவில் உள்ள சோதனை தளத்தில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவின் ஒரே விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்ரமாதித்யாவில் தரையிறங்கவில்லை. ஏனெனில் INS விக்ரமாதித்யா கார்வாரில் பராமரிப்பில் உள்ளது மற்றும் ஜூன் மாதத்தில் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கர்நாடகாவில் அமைகிறது ஆசியாவின் மிகப்பெரிய கடற்படைத் தளம்..? INS விக்ராந்தை நிறுத்த முடிவு..

மேலும் இந்தியாவின் உள்நாட்டு விமானந்தாங்கி போர்கப்பலான INS விக்ராந்த் கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆகஸ்டு 15, சுதந்திர தினம் அன்று பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்பணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஏற்கனவே டாசால்ட் நிறுவனத்தின் ரபேல் மற்றும் போயிங் நிறுவனத்தின் P8I நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானம், சினூக் ஹெலிகாப்டர்கள் மற்றும் C-17 ஹெவி லிப்ட் விமானங்களை விற்பனை செய்துள்ளன.

Also Read: மியான்வாலியில் விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானம்..

Leave a Reply

Your email address will not be published.